கணனியின் வரலாறு – History of Computer

கணனியின் வரலாறு – History of Computer     

       


History of Computer, computer history,  computer history tamil


கணனியின் தேவையானது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான இன்றியமையாத விடயமாகவே இருந்து வருகிறது. கணணி இல்லாத வீடே இன்றைய காலகட்டத்தில் இல்லை என்று சொல்லலாம். ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வொருவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் கணணியின் வரலாற்றை பற்றி அறிந்து வைத்திருக்கவேண்டியது நம்முடைய தேவைப்பாடாக இருக்கிறது. இந்த கட்டுரையில் ஒரு முழுமையான விளக்கத்தை பார்க்கலாம்.



கணனியின் ஆரம்பமானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே ஆரம்பமாகி விட்டது என்றே சொல்லலாம். அவற்றில் இருந்தே நாம் கட்டுரையின் ஆரம்பத்தை தொடங்கலாம்




இது கணிதங்களில் பயன்படுத்தப்பட்ட ஒருவித கணிதவியல் நுட்பமே அபாகஸ்(Abacas). அது பெறுமானங்களை மனிதன் ஞாபகத்தில் வைத்து கணக்குகளை இலகுவாக செய்ய பேருதவியாக உள்ளது. அபாகஸ் சீனாவில் உருவாகியது என்று சொன்னாலும் கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்னே பேபிலோநியர்களால் (Babylonianse) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.


History of  The Computer
Abacus



விசித்திரமான மடக்கை ஒன்றை ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோன் நப்பியர் என்பவரால் 1617ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது ஒரு அச்சிடப்பட்ட அட்டவனையில் இருந்து பெறப்பட்டது. ஒரு மறைவான மூலபொருள் ஒவ்வொரு வினை ஏற்பிமடக்கையிலும் காணப்படுகிறது. இவரது இந்த கண்டுபிடிப்பானது பிற்காலத்தில் Slid வடிவில் உருவாக்கப்பட்டது. இது நாசா நிறுவனத்தால் ஜெமினி, அப்பலோ போன்ற திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.



History of  The Computer
John Napier Bones

History of  The Computer
Slid Rule


கியர் முறையில் கணக்கிடும் இயந்திரமானது வில்லியம் ஸ்ச்சிகாட் என்ற பேராசிரியரால் கண்டறியப்பட்டது. இவர் விரைவாகவே தோற்று நோய் ஒன்றினால் இறந்து போனார்.


History of  The Computer
Gear System Mechine


பஸ்கால் எனப்படும் இயந்திரமானது 1642ம் ஆண்டு ப்லேயிஸ் பஸ்காலினால் தனது வரிசேகரிப்பு தொழிலில் உள்ள தனது தந்தையின் வேலைப்பளுவை குறைக்கவே கண்டுபிடித்தார். இந்த இயந்திரத்தில் கூட்ட மட்டுமே முடிந்தது. பஸ்காலின் கண்டுபிடிப்பின் பின் ஜேர்மனியை சேர்ந்த கொட்ப்ரெட் வில்கோம் லீப்னிஜ் என்பவரால் கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல் என நான்கு செயற்பாட்டை செய்யகூடிய இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.




History of  The Computer
Pascal


1801யில் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஜோசெப் மரீ ஜக்குவார் என்பவரால் விசைத்தறி ஒன்றினை நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்தார். இவ்வாறு மரயட்டை மூலம் துளையடப்படும் முறையானது தற்காலத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


History of  The Computer
Jacquard Loom

1822ம் ஆண்டு சாள்ஸ் பபேஜ் என்ற கணித மேதையல் கணக்கிடும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி இருந்தார். இந்த இயந்திரமானது அவரது அறையின் முழு பகுதியையும் பூரணப்படுத்தி இருந்தது.அவர் அதற்கு Difference Engine என பெயர் இட்டு இருந்தார். கடற்படையின் எண் அட்டவணையில் உள்ள முக்கியத்துவம் காரணமாக இவரது கண்டுபிடிப்புக்கு அரசாங்கம் நிதி உதவியை செய்தது. அனால் இந்த செயற்திட்டம் பதியிலேயே முடிந்தது என்றும் நிதி உதவியும் இடைநிறுத்தப்பட்டது.


 
History of  The Computer
Difference Engine



இதோடு சாள்ஸ் பபேஜ் நின்றுவிடவில்லை . அடுத்ததாக இவர் Analytical Engine என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தார். இது சாதாரணமாக வீட்டின் அளவிற்கு இருந்தது. இவர் இந்த இயந்திரதிற்கு ஜோசெப் மரீ ஜக்குவாரின் தரிதுளையிட்ட முறையினை பயன்படுத்தினர்.


History of  The Computer
Analytical Engine


பிறகு பிற்காலத்தில் வந்த கொலறித் உடைய கண்டுபிடிப்பு கொலறித் டெஸ்க் ஆக வெளிவந்தது. இவர் துளைகளை உணரக்கூடிய காட் ரீடரை உருவாக்கி இருந்தார். பிறகு கொலறித் ஒரு நிறுவனத்தை உருவாக்கினர் அதுவே தற்போதைய IBM ஆகும். மேலும் 1944ம் ஆண்டு Harvard and IBM நிறுவனம் இணைத்து Mark I கணணியை உருவாக்கி இருந்தது. 


இந்த கணணியனது 5 Ton நிறை, 500 மைல் தூரமளவான Wire, 8 அடி உயரம், 51 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இதற்கு 5 horse power engine பயன்படுத்தப்பட்டது.இவை 50 அடி சுழலும் தண்டினையும் கொண்டு இருந்தது. இது தொடந்து 15 வருடங்கள் நிறுத்தாமல் இயங்கிகொண்டு இருந்தது. இது மிகவும் சத்தமாக இயங்கக்கூடியது.



மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் கணனியின் ஆரம்பகட்ட வளர்ச்சியாகவே இருந்தது. இவற்றில் இருந்தே கணனியின் உருவாக்கம் இடம்பெற்றது, அவற்றினை சந்ததி சந்ததிகளாக பிரித்து நோக்குவோம்.


01. முதலாவது சந்ததிக் கணனிகள் – (1940-1956)



இவை வெற்றுக் குழாய் (Vacuum Tubes) என அழைக்கப்படுகிறது. அதிகளவான மின்சார பாவனை, அதிகளவான வெப்பம், ஒரே நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டுமே தீர்க்கூடிய வசதி என்பன இதில் காணப்பட்ட குறைபாடுகளாகும். UNIVAC - Universal Automatic Computer மற்றும் ENIAC - Electronic Numerical Integrator and Computer இதற்க்கு உதரணமாகும்.


History of  The Computer
Vacuum Tube

History of  The Computer
UNIVAC




History of  The Computer
ENIAC


02. இரண்டாம் சந்ததிக் கணனிகள் – (1956-1963)



இங்கு Transistor பயன்படுத்தப்பட்டது. இது முதலாம் தலைமுறை கணணிகளை விட அளவில் சிறிதாகவும் சிறந்ததாகவும், வேகமாக செயட்படகூடியதாகவும், கொறைவான வெப்பத்தை வெளியிடகூடியதாகவும், விலை குறைவாகவும் காணப்பட்டது. இவை Binary முறையில் இருந்து Symbolic, Assembly, Language ஆகியவற்றிற்கு மாறியதுடன் Programming Language ம் உருவாக்கப்பட்டிருந்தது. இவை முதலாவது கணணியாக இருந்ததுடன் செமிப்பகங்களையும் கொண்டிருந்தது.  

   
                         
History of  The Computer
Transistor
                        

03. மூன்றாம் தலைமுறை கணனிகள் – (1964-1971)


இதில் Integrated Circuit பயன்படுத்தப்பட்டுள்ளது. Transistor சிரிதக்கபட்டு சிலிகான் துணுக்குகளில் வைக்கப்பட்டு இருந்ததுடன் குறை கடத்திகள் எனவும் அழைக்கப்பட்டு இருந்தது. முன்னைய கணணிகளை பார்க்க இது வேகமாகவும் வினைதிரனகவும் காணப்பட்டது. இதில் திரை மற்றும் தட்டச்சு பயன்படுத்தப்பட்டது. அளவில் சிறிதாகவும் விலை குறைவாகவும் இருந்தது.


History of  The Computer
3rd Generation Computer


04. நான்காம் தலைமுறை கணணிகள் – (1971- Present)


இந்தவகை கணனிகளில் Micro Processor பயன்படுத்தப்பட்டு இருகின்றன. இவை உள்ளங்கையில் வைக்கக்கூடியதாக இருப்பதுடன் Intel 4004 Chip உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. 1981இல் IBM கணனியில் முதலாவதாக இதை பயன்படுத்தி வீட்டு பவனையளர்களுக்கான கணணியை உருவாக்கி இருந்தது. இந்த நான்காம் தலைமுறை கணனியால் இணைய பாவனை, GUI பயன்பாடு, Smart Phone பாவனை என்பவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


History of  The Computer
4th Generation Computer




05. ஐந்தாம் தலைமுறை கணனிகள் – Artificial Intelligent



இவை இன்னும் வளர்ச்சில் உள்ள கணனிகள் ஆகும். இருப்பினும் குரல்வழி பயன்பாடுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றது. இவை எதிர்காலத்தில் மூலக்கூறு மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இவை தற்காலத்தில் குரல்வழி உரையாடலுக்கு பதில் அளிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.



History of  The Computer
Artificial Intelligent

History of  The Computer
Artificial Intelligent

இந்த கட்டுரையானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஏதேனும் உங்களுடைய கருத்துக்களை எமக்கு சொல்லுவதாக இருந்தால் Comment ஊடக சொல்லுங்கள்.

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2