அறிமுக விமர்சனம்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் !
வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப கலாச்சாரத்தின் அந்திம கட்டத்தில் நாம் எண்ணிக்கூட பார்க்காத வகையில் உச்ச கட்டத்தை தொட்டு இருக்கிறது நம் உலகம். ஒவ்வொரு நாளும் நம்மை சிந்திக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்று எவ்வுலக வளர்ச்சியானது ஒருபடி மேலே சென்று கொண்டேதான் இருக்கிறது .
இவ்வாறு வளர்ந்து செல்லும் தொழில்நுட்ப கலாச்சாரத்தில் நாமும் நமது இலங்கை வாழ் மக்களும் எப்பக்கத்தில் உள்ளோம் என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தல் அதற்கான விடை எம்மிடத்தில் இல்லை.
அப்பிடியே ஒரு புதிய தகவலை நாம் கேள்விப்பட்டு விட்டால் அப்படியா........! உண்மையாகவா.......! என கேட்டுவிட்டு சாதாரண நடைபோடும் சமூகமாகவே இருக்கிறோம். அதில் தமது பிழை ஏதும் இல்லை. தகவல் தொழில்நுட்ப அறிவுடையவர்கள் குறைவாக இருப்பதும் அவ்வாறானவர்கள் மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப தகவல்களை புரியவைப்பதில் முயற்சி எடுக்கமையுமே காரணம் ஆகும்.
இவ்வாறான பல்வேறு ஆதங்கங்களின் வெளிப்பாடாக உங்களில் ஒருவர்களாக இருந்து உங்களுக்காகவே நாம் இப்போது ஒரு குழுவாக இணைந்து தொழில்நுட்ப தகவல்கள் சந்தேகங்களுக்கான தீர்வுகள் என்பவற்றை இலவசமாக சொல் செயல் மூலம் விளங்கவைக்கவே இந்த ஊடகத்தை நாம் உருவாக்கி உள்ளோம்.
நாம் வெறுமனே இணையத்தை பயன்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அறிவை வழங்கவும் வளர்க்கவும் இலங்கை வாழ் மாணவர்களுக்கு O/L, A/L சார்பான பாடநெறியை எளிய வடிவில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
அகவே தங்களது ஒத்துழைப்பை எங்களது குழுவிற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் முதல் அடியை நாம் எடுத்துவைக்கிறோம்.
தமிழால் இணைவோம்
BIG BIT TECH -TAMIL
Tags:
Introduction
good luck
ReplyDeleteநன்றி Bro. உங்களுடய ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய Youtube Channel இன்னும் Subscribe பன்னலன்டா கீழ உள்ள Link click பண்ணுங்க
Deletehttps://www.youtube.com/channel/UCwXu8fmOn1nDjQ0n1oi8fZQ?view_as=subscriber