Outlook-(Personal Information Manager)


OUTLOOK – Personal Information Manager


கணணி ஒன்றை பயன்படுத்தும் போது அதில் உள்ள Operating System இலவசமாகவே பல்வேறு மென்பொருட்களை வழங்குகிறது. அனால் அவை வெறும் காட்சி பொருளாகவே இருக்கின்றதே தவிர அதற்கான பயன்பாட்டை நாம் அறிவதில்லை. அவ்வாறு அதிக சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அனால் எம்மால் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத மென்பொருள்தான் Outlook. இதைப்பற்றியே இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

Outlook ஆனது Microsoft நிறுவனத்தினால் வழங்கப்படும் தனிப்பட்ட தகவல்களை பராமரிக்கும் (Personal Information Manager) மென்பொருள் ஆகும். இது MS Office தொகுப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்படுகிறது. இவை பெரும்பாலும் மின்னஞ்சல் சேவைக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டாலும் இதன் பயன்பாடானது பரந்துபட்டது. நாட்காட்டி நினைவூட்டல்(Calendar Reminder), குறிப்பிட்ட பணிகளை முகாமை செய்தல்(Task Manager), தொடர்பாடல்களை முகாமை செய்தல்(Communication Manager), தகவல்களை களஞ்சியப்படுத்தல்(Data Storage/Cloud Service), இணைய உலாவுதல் (Internet Browsing) போன்ற பல்வேறு சேவைகளும் இதன்மூலம் வழங்கப்படும் சேவைகளாகும்.

சில நிறுவனங்கள் Microsoft Exchange Server மற்றும் Microsoft Share Point Server உடன் இணைந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் பயன்பாடிற்காக இந்த Outlook பாவனையை பயன்படுத்துகிறது. கலந்துரையாடல் அட்டவணைகள் (Meeting Schedule), மின்னஞ்சல் பகிர்வு (Mail Sharing), அறிவித்தல் செயற்பாடுகள்,  பணியுயர்வு சம்பந்தமான தகவல்கள், தனிநபர் சம்பளப்பட்டியல் இது போன்ற பல்வேறு செயற்பாடுகளை இதன் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறது. இதற்காக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனியான Username & Password வழங்கப்பட்டு இருக்கும்.

 
மேலும் Microsoft  நிறுவனமானது  Outlook இன் செயற்பாட்டை இன்னும் விரிவுபடுத்த தங்களுடைய Smart Phone களுக்கான பதிப்பையும் 2015ம் ஆண்டு கொண்டுவந்தது. இதன் மூலம் இன்னும் தன்னுடைய தகவல்களை இலகுவாக பெறக்கூடியதாகவும் காலவிரயமும் தவிர்க்கப்பட்டது.


இப்போது நாம் Outlook இன் சேவைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
1.ஒருவர் Attachment இல் அனுப்பும் ஒரு File ஐ open பண்ணாமலே முன்னோட்டம் செய்யமுடியும்.
2.Auto Account Setup வசதி
3.Calendar Sharing.
4.நேரடியாக உங்களது கையடக்க தொலைபேசிக்கு sms, mms அனுப்பும் வசதி.
5.விரைவான பரிவர்த்தன முறை.
6.Desktop Alert
7.Spam Mail களை பிரித்து எடுத்தல்.
8.தகவல் உரிமை முகாமைத்துவம்(Information Right Management).
9.Reading Pane
10.கோப்புகளை தேடல்.
11.Unicode Fontsகளை பயன்படுத்தல்.
12.Attachment Link to Cloud Resource.
13.Groups Redesigns.
14.Search Clouds
15.Clutter Folder
16.People Hub
17.Remainder Attachment
18.Outlook Data File Converting (.ost)
19.Internet Browsing
20.Personal Storage Clouds

இவ்வாறு இதனால் வழங்கப்படும் சேவைகளானது நீண்டுகொண்டே செல்கிறது. உங்களது தனிப்பட்ட சேவைகளை முகாமை செய்யகூடிய ஒரு சிறந்த இலவச மென்பொருள் இதைவிட மேலான வேறொன்று இருக்க முடியாது.

அகவே இதன் பயன்பாடு உணர்ந்து இனிவரும் காலங்களில் Outlook ஐ நாமும் பயன்படுத்துவோம். இந்த ஆகம் உங்களுக்கு பிடித்து இருந்தாலோ அல்லது குறைகள் இருந்தாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ Comment  வழியாக சொல்லுங்கள்.


நன்றி

தமிழால் இணைவோம்

Big Bit Tech



Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2