VPN - (Virtual Private Network)


VPN - (Virtual Private Network)





கடந்த சில வாரங்களாக கேள்விப்பட்ட பயன்படுத்திய பெயர்தான் இந்த VPN. இதில் என்ன ஒரு வேடிக்கை என்று பார்த்தல் இது என்ன என்றே தெரியாமல் பயன்படுத்தியதுதான். VPN பற்றி பலர் மத்தியிலும் பல வதந்திகள் இருந்து வந்தது. இன்று நாம் இந்த VPN  பற்றிய பரந்த பார்வையை இந்த இடத்தில் பார்ப்போம்.

சாதாரணமாக நாம் ஒரு இணையத்தளத்தை பார்வை இடும் போது என்ன என்ன நடக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சாதாரணமாக நமது இணைய பயன்பாட்டின் போது இணைய சேவை வழங்குனர் (ISP) அதாவது நாம் பயன்படுத்தும் Dialog, Airtel, Etisalat, Mobital, Hutch, SLT போன்றவர்களின் கட்டுப்பாட்டிலேயே பயன்படுத்தவேண்டி இருக்கிறது.

இவர்கள் என்ன என்ன விடயங்களை பார்வையிட வேண்டும் பார்வை இட கூடாது என வரையறை செய்து வைத்துள்ளார்களோ அவற்றை மாத்திரமே எம்மால் செய்யமுடியும். இணைய சேவை வழங்குனர்கள் நமக்கு ஒரு  IP Address வழங்கி இருப்பார்கள் அந்த இப் IP Address ஐ பயன்படுத்தி நாம் இணையத்தில் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் சேகரித்து வைக்கவும் தேவை ஏற்படின் அரசாங்கத்துக்கு வழங்கவும் முடியும்.


அகவே தமது அனைத்துவித இணையத்தள பயன்பாடுகளும் ஒரு திறந்த செயற்பாடாகவே காணப்படுகிறது. இவற்றில் இருந்து விடுபடவே இத்தகைய VPN சேவையானது பயன்படுத்தப்படுகிறது.

VPN ஐ பொருத்தமட்டில் உங்களது தகவல்கள் எந்த ஒரு இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISP) செல்லாமல் தனி ஒரு Server இல் Encrypt செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது இணைய சேவை வழங்குனருடைய (ISP) Server இக்கு செல்லாமல் நீங்கள் எந்த VPN ஐ பயன்படுத்துகிறீர்களோ அவர்களுடைய Serverஇல் Encrypt செய்து பாதுகாக்கபடுகிறது. இதனால் இணைய சேவை வழங்குனரால் (ISP) உங்களுக்கு வழங்கப்பட்ட IP Address மறைக்கப்பட்டு வேறொரு IP Address வழங்கப்படுகிறது. இதனால் உங்களுடைய தரவுகளை இணைய சேவை வழங்குனரால் (ISP) எடுக்க முடியாது. இதனால் உங்களுடைய இணைய பாவனை Private ஆக்கப்படுகிறது.


சில பாரிய நிறுவனங்கள் தங்களுக்கான தனி VPN Server ஐ வைத்துள்ளது, இதனால் அவர்களது தரவுகள் பாதுகாக்கப்படுவதோடு அந்த நிறுவனத்தின் சகல கிளைகளின் செயட்படுகளும் ஒரே கூறையின் கீழ் கொண்டுவரப்பட்டு தரவு சிதறல் பாதுகாக்கபடுகிறது. மேலும் நிறுவன செயட்படுகளை வீட்டில் இருந்தவரே செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


நீங்கள் இதை படிக்கும் போது Wow…..! அப்ப நாம தொடந்து VPN பயன்படுத்தலாமே என்ற உணர்வு ஏற்படலாம்.அதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது. அது அந்த VPN சேவை வழங்குனரை பொருத்து வேறுபாடும்.

நீங்கள் உங்கள் நாடுகளால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத இணையதளங்களை பார்வையிடும் போது ஒரு குற்றவாளியாக கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது. சாதாரண இணையதள பாவனையின் போது காணப்படுகின்ற வேகமானது இந்த VPN பாவனையின் போது மிக குறைவாகவே காணப்படும். நீங்கள் VPN பாவனையின் போது நாடு ஒன்றினை தெரிவு செய்யும் பொது உங்களது நாட்டிற்கு அருகில் உள்ள நாட்டை தெரிவு செய்வதால் இணைய வேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

   முக்கியமாக நீங்கள் VPN பாவனையின் போது Encrypt  செயற்பாட்டில் ஒரு தவறு ஏற்படுமாயின் உங்களுக்கான தகவல் Error ஆக காண்பிக்கப்படும். இதனால் அதிகமாக இணைய தடங்கல்களுக்கு நீங்கள் முகம் கொடுப்பீர்கள்.

    இவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளை பார்க்கும் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இணையதளத்தினை பார்வையிட முடியும், இணைய பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், தனிப்பட்ட செயற்பாடுகள் உங்களுடையதாக மாத்திரமே காணப்படும்.

அகவே நீங்கள் இப்போது VPN சம்பந்தமான ஓர் பரந்த அறிவை பெற்று இருப்பீர்கள் என நம்புகிறோம். மேற்குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமான கருத்துக்களை சந்தேகங்களை Commant மூலம் எமக்கு தெரிவியுங்கள்.

நன்றி

தமிழால் இணைவோம்

Big Bit Tech



Post a Comment

Previous Post Next Post