Artificial Intelligence
– அப்படி என்றால் என்ன ?
21ம்
நூற்றாண்டில் மனிதர்களை அதிகம் பேசவைத்த பல்வேறு ஆய்வுகளை அடுத்த நிலை கட்டத்திற்கு
இட்டுச்சென்ற ஒரு தலைப்பு தான் இன்று பார்க்க இருக்கின்றோம். AI – Artificial Intelligence என்றால் நமக்கு
முதலில் நியாபகம் வருவது என்திரன் படத்தில் வந்த Chitty
Robot தான். இன்று இந்த ஆக்கம் உங்களுக்கு புதிய ஒரு விடயத்தை உங்களுக்கு
எத்திவைக்கும் என நம்புகிறோம்.
ஒருவர்
சுயமாக சிந்தித்து ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் போது அதனை மனிதர்களை
பொறுத்தவரை Intelligent என்று
நாம் குறிப்பிடுகிறோம். இதே கோட்பாடுதான் இந்த Artificial
Intelligenceலும் பயன்படுத்தப்படுகின்றது.
மனித
மூளையானது ஒரு பிரச்சினைக்கான தீர்வினை தனது நினைவில் வைத்துகொள்ளும். அந்த நினைவு
வேறொரு பிரச்சினைகான தீர்வாக அமையும் போது அந்த இடத்தில அதனை பயன்படுத்தும். இந்த
நடைமுறையை அறிவியலில் Cognition என
அழைகின்றனர்.
Artificial என்று கூறும் போது தமிழில் அது செயற்கையான என்ற
அர்த்தத்தில் வரும். ஆக மனித மூளையானது இயற்கையாக புத்திகூர்மையாக இருப்பது போன்று
செயற்கை வடிவில் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் தான் இந்த Artificial Intelligence ஆகும்.
Artificial Intelligence என்று சொன்ன உடன் நம் மனதில் வருவது Robot தான். ஆனால் அது மட்டுமே AI இல்லை. சாதரணமாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு
விடயத்திளும் AI யின் பயன்பாடு
காணப்படுகின்றது. உங்களது Smart Phone ஐ
பொருத்தமட்டில் Iphone நிறுவனம்
SIRI என்ற AI தொழில்நுட்பத்தையும் Google நிறுவனம் Google
Assistant என்ற AI தொழிநுட்பத்தையும்
Samsung நிறுவனம்
Bixby என்ற AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்றன.
மேலும்
அண்மையில் அமேசான் நிறுவனம் அறிமுகபடுத்திய Amazon
Go என்ற ஒரு Smart Shopping
Center முழுக்க முழுக்க இந்த Artificial
Intelligence ஐ பயன்பத்தி உருவாக்கி இருக்கின்றது. இது நாம் அந்த கடை தொகுதிக்குள் நுழைந்ததும் நமது Smart Phone யில் உள்ள QR Code ஐ Scan
பண்ணிவிட்டு
நாம் அங்கு எந்த பொருளை எடுத்தாலும் அது அங்குள்ள 100
கணக்கான
Camera மூலம் பதியப்படுகிறது.
பின் நாம் கடையில் இருந்து வெளியே வந்ததும் நமது கணக்கில் இருந்து அவை அனைத்துக்குமான பணம்
கழிக்கபடுகிறது.
Amazon Go Shopping Center
இப்போது
வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு AI
தொழில்நுட்பத்தை
கொண்டு வந்துள்ளனர். நாம் கேள்விபட்டு இருப்போம் “Knight
Rider” என்ற ஆங்கில திரைபடத்தில்ஒரு Car தானாகவே Self-Drive
செய்யும்.
அவ்வாறே இந்த AI பயன்படுத்தி Self-Drive என்ற தொழில்நுட்பம் தற்கால வாகனங்களில்
பயன்படுத்தபடுகின்றன.
இவ்வாறு
இப்போது எங்கு பார்த்தாலும் AI யின்
பயன்பாடும் காணப்படுகின்றது. இந்த AI ஆனது
மனிதனை போன்று பயிற்றுவிக்கப்படுகிறது. நாம் ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள பல்வேறு
தடவை Training எடுப்போம்.
அப்படித்தான் ஒரு AI தொழில்நுட்பமும்
பயிற்றுவிக்கபடுகிறது.
இவ்வாறு
ஒரு விடயத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் நாம் கற்று தேர்ந்து விட்டு பின் அதனை சரியாக
செய்ய பழக்கப்பட்டு விடுகின்றோம் . அதே போன்று AI
உம்
நன்று பயிற்றுவிக்கபட்ட பின் தனது செயட்படுகளை முழுமையாக புரிந்து கொன்று அதற்கேற்றல்
போல் செயற்படும். Google ஆனது 4 Million KM தனது AI
தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி Self-Drive ஐ Training பண்ணியுள்ளது.
என்னதான்
AI யின் வளர்ச்சி
உச்சத்தை தொட்டு இருந்தாலும் அதன் பிரதி கூலங்களையும் இன்னும் சிலர் எச்சரித்து
கொண்டே இருக்கின்றனர். சாதரணமாக என்திரன் படத்தை போன்று AI ஆனது தானாகவே அனைத்தையும் சிந்தித்து செயற்பட
ஆரம்பித்து விட்டால் அது மனிதனின் பூகோல வாழ்வியலுக்கே ஆபத்தாகி விடும் என்ற
அச்சம் நிலவதான் செய்கின்றது.
மேலும்
Amazon Go மற்றும்
Vera என்ற Russia வின் நேர்காணல் செய்யும் Robot போன்றவற்றை பற்றி நாம் பார்த்து இருக்கிறோம்.
இங்கு மனிதர்களுக்கு எந்த ஒரு வேலையுமே கிடையாது. இதனால் வேலையின்னைமை அதிகரித்து
மனிதனிடம் காணப்பட்ட கட்டுபாடுகள் அனைத்தும் AI தொழில்நுட்பத்திடம்
சென்றுவிடும் அபாயமும் காணப்படுகின்றது.
இந்த
ஆக்கம் Artificial Intelligence யில்
உள்ள அனைத்து அடிப்படை சந்தேகங்களையும் நீக்கி இருக்கும் என நம்புகிறோம். இந்த ஆக்கம்
தொடர்பான சந்தேகங்கள் கருத்துகள் இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
தமிழால்
இணைவோம்
BIG BIT TECH