Cellular Network - நாம் அறிய வேண்டியவை
ஆரம்ப
காலத்தில் காணப்பட்ட தொலைத்தொடர்பு பரிவர்த்தன முறைகளை பார்க்கிலும் தற்கால
தொலைதொடர்பனது பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.ஆரம்ப காலத்தில் சாதாரண 1G இல் இருந்து 2G,
3G, 4G, 5G வரை வளர்ச்சி கண்டுள்ளது. இன்று நமது கட்டுரையில் Cellular Network ஐ பற்றி ஒரு பூரண விளக்கத்தை
பார்க்கலாம்.
ஆரம்பத்தில்
காணப்பட்ட 1G Network இல்
இருந்து 5G வரை பல்வேறு
வகையான Network பயன்பாடுகளை
நாம் அனுபவித்து இருப்போம். இவ்வாறு ஒரு Network
இல்
இருந்து இன்னொரு Network க்கு
மாறும் போது அதன் வளர்ச்சியானது வேகத்தில் பாரிய பங்களிப்பை வழங்கியது.
இவற்றில்
G என்பது Generation ஐ குறிக்கிறது. நாம் இப்போது Cellular Networkஇணை தனித்தனியாக பிரித்து நோக்குவம்.
Ø
1G
- 1st Generation :
1st
Generation தொலைதொடர்பனது ஆரம்பத்தில் 1980ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 1G தொழில்நுட்பமானது Analog இணை அடிப்படையாக வைத்தே இயங்கியது.இந்த
வலையமைப்பின் ஊடக உள்நாட்டு அழைப்புக்களை மாத்திரமே மேட்கொள்ளகூடியதாக இருந்தது.
இதன் அதிகூடியவேகமாக 2.4Kbps காணப்பட்டது. 1G
பயன்பாடானது
AMPS ( Advance Mobile Phone System ) முறைமையிலேயே
இயங்கியது.இதில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியனது அளவில் பெரியதாகவும் தெளிவற்ற
தொடர்பாடலும் குறைந்த Battery Life ம்
காணப்பட்டது.
1st Generation Device |
Ø
2G
– 2nd Generation :
இது 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது. இது GSM என்ற Standard
Network இல் வெளிவந்தது. 2G Network ஆனது Digital
Signal அடிப்படையாக கொண்டே கொண்டே இயங்கியது. இதனால் Wireless Device பாவனை அதிகரித்தது. இதனால் இணையப் பயன்பாடும்
அதிகரித்தது.
இந்த GSM இன் வேகமானது சாதாரணமாக 30Kbps இல் இருந்து 60Kbps
வரை
காணப்பட்டது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியானது 2.5G
ஆக உருவானது,
இது GPRS என்ற
பெயரில் பயன்பாட்டிற்கு வந்தது. இது 1997ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வேகமாக 110Kbps
ஆக
காணப்பட்டது.
இதன் அடுத்த
கட்டமாக 2.75G இன்
பயன்பாடானது Edge என்ற
பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2003ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வேகமாக 135Kbps
காணப்பட்டது.
Ø 3G – 3rd Generation :
இதனை ITU
என்ற Network ஆனது IMT-2000
என்ற
பெயரில் 2000ம்
ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு CDMA-2000
என்ற
தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடுத்த பாகமான EV-DO என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 3 கட்டமாக சேவையை வழங்கியது.
1.
REV-O = 2.4 Mbps
2.
REV-A = 3.1 Mbps
3.
REV-B = 10 Mbps
இதற்கு
போட்டியாக அறிமுகபடுத்தப்பட்ட UMTS ஆரம்பத்தில்
384 Kbps ஐ
வழங்கினாலும் இதன் அடுத்த பாகமான HSDPA
ஆனது 21 Mbps வரை வழங்கியது. 3G
யிலும்
3.5G மற்றும்
3.75G பயன்பாடு
காணப்பட்டது. 3.75G ஆனது HSPA+ என்ற பெயரில் 84
Mbps வரை வேகத்தை கொடுத்தது.
Ø
4G
– 4th Generation :
இதன் சேவை 2008ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையும் ITU Network தான் வழங்கி இருந்தது. இதற்கான
பயன்பாட்டு முறைமை IMT-Advance என்ற
பெயரில் வெளிவந்தது. இதனது சராசரி வேகம் 100
Mbps வரை காணப்பட்டது. இதன் பின் பல்வேறு Cellular
Networks அறிமுகமாகியது. அதில் 4G LTE மற்றும் 4G LTE
Advance என்பவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வேகமாக 100 Mbps விட அதிகமாக காணப்பட்டது.
Ø
5G
– 5th Generation :
5G Network ஆனது
தற்போது பாவனையில் இல்லாதுவிடினும் தற்போது அது பயன்பாட்டு பரிசோதனையில் உள்ளது.
இதனது செயல்பாட்டு வேகமானது சாதாரணமாக 1 Gbps இல் இருந்து 10
Gbps வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 சாதனங்களுக்கு இடையிலான தொழில்பாட்டு வேகம்
அதிமாக இருக்கும் எனவும் Battery Life அதிகமாக
இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Europe நாடுகளில்
இந்த 5G தொழில்நுட்பதிட்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மும்முரமாக
இடம்பெற்றுக்கொண்டு இருகின்றது. இது 2020
களில்
அனைவரது பயன்பாடிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆக்கமானது உங்கள் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும் என நாம் நம்புகிறோம். இந்த ஆக்கம் பற்றிய உங்களது கருத்துக்களையும் சந்தேகங்களையும் Comment வழியாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech Article