EMAIL – மின்னஞ்சல்
இன்று
நாம் பார்க்க கூடிய தகவல் நாம் எல்லோரும் அறிந்த கேள்விப்பட்ட ஒரு விடயம் தான். வங்கியில்
கணக்கு இல்லாதவர்கள் கூட இருப்பார்கள் அனால் இதில் கணக்கு இல்லாதவர்கள் இருக்கவேமாட்டார்கள்.
அது தான் மின்னஞ்சல் ( Email ). நாம் இன்று நமது ஆக்கத்தில் மின்னஞ்சல்
பற்றிய பார்வையை பார்க்கலாம்.
ஆரம்பத்தில்
நாம் தூர பிரதேசத்தில் உள்ள ஒருவரை தொடர்புகொள்வதாக இருந்தால் கடிதத்தை பயன்படுத்துவோம்.
அதே போன்ற ஒரு முறை தான் இந்த மின்னஞ்சல் ஆகும். அதனால் இதனை மினஞ்சல்-Electronic Latter எனவும் அழைகின்றனர். இதனைத்
சேவையானது தற்காலத்தில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
மின்னஞ்சல்
ஆனது மின்சாதனங்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாற பன்படுதப்படுகிறது. 1960 ம் ஆண்டு முதல்தடவையாக மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டலும்
1970 களில்
தான் அனைவரும் பயன்படுத்தும் அளவிற்கு பிரபல்யமானது. ஆரம்பகாலத்தில் ஒரு தகவலை
மாத்திரம் பரிமார பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் இன்றைய காலத்தில் கணணி வலையமைப்புகள்
அனைத்தும் இயங்க ஒரு சாவியாக பயன்படுத்தபடுகிறது.
ஆரம்பகாலத்தில்
மின்னஞ்சல் ஊடக செய்தி பரிமாறும் போது செய்தி அனுப்புபவரும் செய்தியை பெறுபவரும் ஒரே
நேரத்தில் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். அனால் இன்றைய காலத்தில் செய்தி
அனுப்புபவர் மாத்திரம் இணைய இணைப்பில் இருந்தால் போதும் செய்தி பெறுபவர் எப்போது
இணையத்திற்குள் வருகிறாரோ அப்போது பார்க்க முடியும்.
![]() |
ஆரம்பத்தில் காணப்பட்ட Email System |
ஆரம்பத்தில்
மின்னஞ்சல் மூலமாக ASCII என்ற Text Message களை மாத்திரம் அனுப்பகூடியதாக
இருந்தது. அனால் இன்று MIME (Multipurpose
Internet Mail Extension) என்பதால் Multimedia fileகளை இணைத்து அனுப்பமுடியும். இதனால்
இது அதிகமாக மக்களின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த
மின்னஞ்சல் சேவையினை பல்வேறுபட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன அவற்றில் Google, Yahoo, MSN, Microsoft முன்னிலையான
சேவையை வழங்குகிறது. இதனால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.
![]() |
![]() |
Yahoo |
![]() |
Microsoft |
![]() |
MSN |
தற்காலத்தில் நீங்கள் ஒரு Smart Phone பயன்படுத்துபவராக இருத்தால் அதற்கு முதலில் உங்களிடம் ஒரு Gmail ID கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுடைய Smart Phone ஐ முழுமையாக பயன்படுத்த முடியும். இதனால் உங்களது அனைத்து தகவல்களும் உங்களது Email IDக்கு ஊடக பாதுகாக்கப்படுகிறது. இதவும் இந்த Email யின் தேவையை அதிகரித்தது.
நாம்
இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் தொழில்நுட்ப சூழலானது நாம் விரும்பியும்
விரும்பாமலும் Social Media களின்
பயன்பாட்டை நமக்குள் உள்வாங்கி கொண்டது. நாம் எந்த ஒரு Social Media Account open பண்ணுவதாக
இருந்தாலும் அதற்கு உங்களுடைய Email Address கண்டிப்பாக
கொடுத்தே ஆகவேண்டும்.
இவ்வாரு
நாம் இணையத்தின் ஊடக செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் இந்த Email யின் தாக்கமானது அதிகமாகவே உள்ளது . உங்களுக்கான
தனி Email ID இல்லது
விடின் நீங்கள் இணையமே பயன்படுத்தமுடியாது என்ற சூழலை உருவாக்கி உள்ளதை காணகூடியாத
உள்ளது.
இதற்கு
ஒரு முக்கியமான காரணம் என்ன என்றால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளின்
தரவுகளையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து பாதுகாப்பதே. அதற்கான சிறந்த வழியாக மின்னஞ்சல்
கருதப்பட்டு இதுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே
மின்னஞ்சல் ஆனது சாதாரணமாக ஒரு தகவலை அனுப்ப மட்டும் பயன்படக்கூடியது என்ற தவறான
புரிதலில் இருந்து நாம் விடுபட்டு இருப்போம் என்று நம்புகிறோம். இந்த ஆக்கம்
பிடித்து இருந்தால் உங்களது கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
தமிழால்
இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech Article