கோடிகளில் புரளும் Google C.E.O சுந்தர் பிச்சை


கோடிகளில் புரளும் Google C.E.O  சுந்தர் பிச்சை            இந்திய நாட்டின் தமிழ் நாட்டினை சேர்ந்த தமிழர் தான் சுந்தர் பிச்சை. இவர் தற்போதைய Google நிறுவனத்தின் C.E.O ஆக உள்ளார். இது முழு தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய விடயமாகும்.

     இவர் Google இல் இணையும் சந்தர்ப்பத்தில் இவருக்கு Google ஆல் குறிப்பிட்ட அளவு பங்கு வழங்கப்பட்டது. இதனால் Google நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு அமைய ஒருவருக்கு வழங்கப்பட்ட பங்குகளை 3 வருடங்களுக்கு விற்பனை செய்ய முடியாது.

     இவருக்கு பங்குகள் ஆனது 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.  இந்த வருடத்தோடு அவருக்கு 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதனால் இப்போது இவருடைய பங்குகளின் சராசரி பெறுமதி கிட்டத்தட்ட 2500 கோடி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

     இவருக்கு மேலும் 2015, 2014 மற்றும் 2016 காலப்பகுதிகளிலும் பங்குகள் வழங்கப்பட்ட போதிலும் அதன் பெறுமதிகள் குறிப்பிடப்படவில்லை.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post