Hard Disk - வன்வட்டு


வன்வட்டு – Hard Disk






தரவுகளையும் தகவல்களையும் சேமித்து வைப்பதற்காக காணப்படுகின்ற ஒரு வன் பகுதிதான் இந்த வன்வட்டு (HARD DISK) ஆகும். இது பெரும்பாலும் கணனியிலேயே பயன்படுத்தபடுகின்றன. இதனை ஆரம்பத்தில் கணனியினுள் பயன்படுத்தினாலும் தற்காலத்தில் கணனிக்கு வெளியிலும் பயன்படுத்துகின்றனர். இதனால் இதனை Internal Hard Disk மற்றும் External Hard Disk என வகைபிரித்து காட்டுகின்றனர் கணணி வல்லுனர்கள்.

தினமும் முன்னேறும் தொழில்நுட்பம் காரணமாக ஆரம்பகாலங்களில் குறைந்த கொள்திரனை(Capacity) கொண்டு இருந்தாலும் தற்காலத்தில் காணப்படும் Hard Disk ஆனது அதிகளவான கொள்திரனை கொண்டு காணப்படுகிறது. ஆரம்பத்தில் 40GB வரை காணப்பட்ட இதன் கொள்ளளவு இப்போது 4 TB வரை காணப்படுகிறது. இந்த அளவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வேறுபட்டு செல்கிறது. வன்தட்டில் தரவுகளை சேமிக்கவும் சேமித்த தரவுகளை தகவல்களாக  நிரல்படுத்தி பயன்படுத்தவும் முடியும்.



வன்வட்டின் உள்தோற்றதில் வன்தட்டு நிலை நினைவகம் என்ற ஒரு அமைப்பு உள்ளது. அதில் செம்பழுப்பு நிறத்தில் காணப்படுவது காந்தபூச்சி கொண்ட வட்டை ஆகும். இது மேல் நடுவில் நீட்டிக்கொண்டு இருக்கும் பகுதியின் நுனியில் உள்ள காந்த தன்மையை துல்லியமாக உணர இதில் காந்த உணரி காணப்படும். இது சாதாரண காந்தத்தில் உள்ளது போன்று தென்முனை மற்றும் வடமுனையை கொண்டு காணப்படும். இதனால் இது விரைவாக தகவல்களை சேமிக்கும் தன்மையை கொண்டுள்ளது.




வன்தட்டு நிலை நினைவகம் என்பது கணனிகளில் உள்ள நிலையான நினைவகம் குறிப்பாக மேசைகணணி(PC), மடிக்கணணி(Laptop), குருமடிக்கணணி போன்றவற்றில் காணப்படும் இயங்குதள மென்பொருட்கள் (OS-Operating System Software) முதல் பல்வேறு பயன்பாடுகளை கொண்ட மென்பொருட்கள் வரை பலவற்றை சேமித்து வைக்கும் ஒரு இடம் ஆகும். கணணி திடீர் என்று OFF ஆகிவிட்டாலும் இதில் உள்ள எந்த ஒரு தகவலும் அழிந்துவிடாது. இதனால் இதனை அழியா நினைவகம் (Non Volatile Memory)எனவும் “நிலை நினைவகம்” எனவும் அழைக்கின்றனர்.

இந்த நிலை நினைவகத்தில் காந்த பூச்சுடைய வட்டைகளில் தரவுகளானது 0, 1 என்ற Binary அடிப்படையில் Encode செய்யப்பட்டு சேமித்து காணப்படும். இந்த வந்தட்டுக்கள் நிமிடத்துக்கு பல்லாயிறம் வரை சுழலும் தன்மை கொண்டுள்ளது. இதனால் எண்ணிம தரவுகளை பதிவு செய்யவும் பதிந்த தரவுகளை படிக்கவும் முடியும்.



வன்தட்டு நிலை நினைவகத்தில் காந்தபூச்சி வட்டை ஊசி நடுவில் உள்ள காந்ததன்மையுடன் தொடாமலும் காந்த பூச்சி வட்டையின் நடுப்பகுதிக்கும் முடிவு பகுதிக்கும் மாறி மாறி செல்வதால் வன்தட்டு நிலை நினைவகத்தில் முழுமையாக தரவுகளை Binary முறையில் சேமிக்கின்றது.





இந்த வன்தட்டு நிலை நினைவகத்தை கணனிகளில் பயன்படுதுவதற்கு முன்னதாகவே தனிமனித பயன்பாட்டிற்காக 1956ம் ஆண்டு IBM நிறுவனம் உருவாக்கி பயன்படுத்தியது. அதன் கொள்ளளவு வெறும் 5MB ஆகவே இருந்தது. அனால் இப்போது இவை கணனிகளில் மட்டும் அன்றி Digital Video Recorder மற்றும் Smart Phone போன்றவற்றில் பயன்படுத்தபடுகின்றன.


கணணியை பொருத்தமட்டில் இந்த வன்தட்டனது தகவல்களை சேமிக்க உதவும் ஒரு துணை உறுப்பாகும் . இதன் கொள்ளளவு 40GB, 80GB, 128GB, 256GB, 500GB, 1TB, 2Tb, 4TB போன்ற அளவுகளை கொண்டு காணப்படுகிறது. இது தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்து பயன்படுதகூடியதாக இருக்கின்றது. கணணி வன்தட்டில் காந்தத்தட்டு(Platters)  காணப்படும். ஒரு வன்தட்டில் இவ்வாறு பல்வேறு Platters காணப்படலாம். இதனால் ஒவ்வொரு Platters இக்கும் இடையில் வாசிப்பு பொருத்தப்பட்டு இருக்கும். இந்த Platters அனைத்தும் சுழலியில் பொருத்தப்பட்டு இருக்கும். ஒரேநேரத்தில் அனைத்தும் சுழலும் இதனால் தரவு சேமிப்பு வாசிப்பு என்பவற்றிற்கு இடையில் வேகம் அதிகமாக காணப்படும். இந்த தட்டுக்கள் சுழலும் வேகம் மில்லி செக்கன்களில் அளக்கப்படும்.


வந்தட்டுகளில் காணப்படும் கூறுகளை பகுதி பகுதிய இங்கே நோக்கலாம்.





     1.   Platters :

இது ஒரு உலோக தட்டாக காணப்படுகிறது. இதில் இரண்டு பக்கங்களிலும் தரவுகளை சேமித்துவைக்க கூடிய ஆளுமை காணப்படுகிறது. ஒரு வன்வட்டில் பல நினைவக தட்டுக்கள் இருக்கலாம்.

     2.   Spindle :

நினைவக தட்டுக்களை வைத்து சுழலக்கூடிய சுழலியாகும். இதில் ஒரே நேரத்தில் பல Platters பொருத்தி சுழலும் தன்மை கொண்டது.

     3.   Head :

நினைவக தட்டில் உள்ள காந்த தரவுகளை வாசித்தல் மற்றும் காந்த தட்டில் எழுதுதல் (தரவுகளை பதிதல்) போன்ற செயற்பாடுகளை செய்கின்றன. ஒரு நினைவக தட்டிற்கு மேலேயும் கீழேயும்  இரண்டு Head காணப்படும்.

     4.   Actuator Arm :

Head ஆனது தூண்டில் புயத்தின் மூலம் அங்கும் இங்கும் அசைக்க இது பயன்படுகிறது. நினைவகத்தில் எந்த இடத்திலும் தரவுகளை எழுத இது உதவுகின்றது.

     5.   Power Connector :

இது தகவல்களை பதிவதற்காக வன்வட்டில் மின் இணைப்பை தொடுக்கின்ற கருவியாகும்.

     6.   IDE Connector :

நினைவக தட்டிற்கு தரவுகளை பரிமாற்ற இவை உதவுகின்றன.

      7.   Actuator :

இதனுடன் தொடுக்கப்பட்டுள்ள புயத்தை அங்கும் இங்கும் கொண்டு செல்லும் மின் அங்கமாகிய இது மோட்டர் மூலம் இயங்குகிறது.

 - HND IT Student -



இந்த ஆக்கமனது உங்களுக்கு Hard Disk என்றால் என்ன ? அது எவ்வாறு செயற்படுகின்றது என்ற ஒரு பூரண தெளிவை தந்து இருக்கும் என நம்புகிறோம். இது சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் கருத்துக்களை எம்முடன் Comment மூலம் தெரிவியுங்கள். உங்களுக்காகவே நாம்.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2