ROM – Read Only Memory


ROM – Read Only Memory

ROM – Read Only Memory


கணனியில் நாம் பல்வேறு வன்பகங்கள் தொடர்பில் அறிந்து இருப்போம். அந்த வகையில் முந்திய தலைப்பில் Hard Disk சம்பந்தமாகவும் RAM சம்பந்தமாகவும் பல்வேறு விடயங்களை பற்றி பார்த்தோம். இன்றைய தலைப்பில் நாம் ROM (Read Only Memory) இன் தொழிற்பாடுகள் பற்றிய ஆக்கத்தை பார்க்கலாம்.


ROM – Read Only Memory


Motherboard களில் உள்ள Chip களில் மாற்றமுடியாத கட்டளைகளை உள்ளடக்கிய Program களை உள்ளடக்கிய Memory ஆகும். கணனியானது இயக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் உள்ள Program கள் எப்போதும் இயக்கத்திற்கு தயாராகவே இருக்கும். இவை Computer இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தை கொண்டு இருப்பதால் இவற்றை மாற்றக்கூடாது. Computer தவிர்ந்த Smart Phone, Calculator, Laser Printer போன்றவற்றிலும் இவை பயன்படுத்தபடுகிறது.


இது சாதாரணமாக Non-Volatile Memory என அழைக்கப்பட்டது. அதாவது இது தன்னகத்தே தரவுகளை சேமித்து வைக்கக்கூடியது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டலும் அதன் நினைவக பகுதியில் உள்ள தரவுகள் அழியாமல் இருக்கும்.

     
ROM – Read Only Memory
ROM ஆனது குறிப்பிட்ட சாதனத்தின் இயங்குதள மென்பொருளை (Operation System Software) சேமித்து வைப்பதற்காகவே இது அதிகம் பயன்படுகிறது. இந்த வகையான ROM கள் MROM என்று அழைக்கப்படுகின்றது. இது உற்பத்திக்கு பிறகு மாற்றம் ஏதும் செய்ய முடியாது இருக்கும்.


 ROM ஐ பொருத்தமட்டில் இதில் ஒருங்கிணைந்த சுற்றுக்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படும் எனில் அதில் மாற்றமோ திருத்தங்களோ செய்யமுடியாது. இது இதில் உள்ள பாரிய தீமையாகவே காணப்படுகிறது. மேலும் ROM இல் புதிய விடயங்களை சேர்க்கவும் முடியாது.



ROM பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவற்றினை பற்றி பார்ப்போம்.

       1.  MROM :

இதில் போதுவாக உற்பத்திகளின் போதே தரவுகள் சேமிக்கப்பட்டு சந்தைக்கு வரும். இதில் எந்த எந்த நிறுவனம் வெளியிடுகின்றதோ அதனுடைய இயங்குதள மென்பொருள் அந்த ROM இல் இருக்கும். இதனால் இது MASK ROM (MROM) என்று அழைக்கப்படுகிறது.
 

2. PROM : 

இவ்வகை ROM கள் MROM களை போன்று உற்பத்திகளின் போதே தரவுகளை சேமிக்காமல் உற்பத்தி செய்ததன் பிறகு தரவுகள் எழுதப்படும். இவையே PROM (Programmable ROM) என அழைக்கப்படுகின்றது.


3. EPROM :

இவ்வகையான ROM தரவுகள் எழுதப்பட்டு இருந்தாலும் அதில் காணப்படுகின்ற தரவுகளை மாற்றம் செய்யகூடிய தன்மை காணப்படும். இதனால் இது EPROM (Erasable Programmable ROM) என அழைக்கப்படும். இது புறஊதா கதிர்கள் மூலம் தரவுகள் அழிக்கப்படும்


4. EEPROM :

இதுவும் EPROM போன்ற செயற்பாட்டை கொண்டதாகும். இருப்பினும் இதில் அதிக தடவைகள் Re programmable செய்து அதிக தடவை பயன்படுதகூடியதாக இருக்கும்.


ROM – Read Only Memory


இன்றைய ஆக்கம் குறிப்பிட்ட அளவான தகவல்களை உங்களுக்கு வழங்கி இருக்கும் என நாம் நம்புகிறோம். உங்களுக்கு எமது ஆக்கம் தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்கள் இருந்தால் அவற்றினை Comment வழியாக தெரிவியுங்கள்.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

     

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2