Thomas Alva Edison – வாழ்க்கை வரலாறு


Thomas Alva Edison – வாழ்க்கை வரலாறு


     
       பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோசனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான  தோமஸ் அல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றுப் பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பார்க்கலாம்.     Thomas Alva Edison 11th February 1847 ம் ஆண்டு America யில் Ohio வில் உள்ள Milan எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை Samuel Edison ஒரு மர வியாபாரியாக இருந்தார். தாய் Nancy Edison ஒரு ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களது நடுத்தர குடும்பத்தில் 7வதும் கடைசியாகவும் பிறந்தவர்தான் Thomas Alva Edison.


            தனது 8 வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட Edison பள்ளியில் சோம்பேறியாகவும் படிப்பில் மந்தமாகவும் இருந்தார். பின் பள்ளியில் இருந்து நின்ற Edison இக்கு தாய் பள்ளிப்படிப்பை கற்பித்தார். இதோடு சேர்ந்து சமய நூல்கள், அறிவியலாளர்களின் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
     தனது 12வது  வயதில் Edison தனது பெற்றோரை சம்மதிக்க வைத்து புகையிரத நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதை ஆரம்பித்தார். மேலும் அங்கே ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி தனது சொந்த பத்திரிகையான Grand Trunk Herald ஐயும் அச்சிட்டு வெளியிட்டார். பின் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் தனது ஆய்வுகூடத்தை நிறுவி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

     ஒருமுறை தான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது புகையிரதம் திடீர் என்று நின்றதில் அவரது ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயணம் கீழே கொட்டியதால் அந்த புகையிரதம் தீப்பிடித்தது. இதனால் கோபம் அடைந்த புகையிரத அதிகாரி அவரது கன்னத்தில் ஓங்கி அடித்ததில் அவரது ஒருபக்க காதும் அவரது ஆயுள் வரை கேளாமலே போனது.

     Edison யின் ஏன்? எவ்வாறு ? என்று கேள்விகேட்கும் குணம் தான் அவரை 1000 இற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. ஒறு முறை Edison கோழி அடைகாத்து குஞ்சுபொறிப்பதை பார்த்து தானும் ஏறி இருந்து குஞ்சு பொறிக்க முயன்ற கதையையும் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த யோசிக்கும் திறனே அவரை இன்றும் உலகம் போற்றற வைத்திருக்கிறது.     ஒருமுறை Edison பத்திரிகை விற்றுக்கொண்டு இருக்கும் போது புகையிரத அதிகாரி ஒருவரின் குழந்தை தண்டவாளத்தில் புகையிரதம் வருவதை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்தது. அதை காப்பாற்றியத்தில் புகையிரத அதிகாரி நன்றிக்கடனாக Edison இக்கு சமிக்ஜை அனுப்ப கற்றுக்கொடுத்து அந்த வேலையையும் வாங்கி கொடுத்தார்.

     சமிக்ஜை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அனுப்பவேண்டி இருந்தது. இதனை யோசித்த Edison தன்னியங்கி மூலம் தானாகவே சமிக்ஜை அனுப்பும் முறையை கண்டுபிடித்தார். மேலும் புகையிரத நிலையத்தில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்த இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். இதில் இருந்து இவரது கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் தொடர்ந்தது.


     பின் தனது தாய் தந்தையின் வறுமை காரணமாக தன் நண்பனின் உதவியுடன் Western Union Company ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின் Edison  1870 இல் New Jersey இல் ஒரு நிறுவனத்தை நிறுவி சில இயந்திரவியலாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார். 1876 ம் ஆண்டு Edison தனது ஆய்வுகூட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சுயாதீன தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தை உருவாகினார்.

     1877 யில் Edison ஒலிகளை பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். அது ஒலிவரையி (Phonograph) என அழைக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் பின் Edison இன் ஆராய்ச்சியானது ஒளியை நோக்கி இடம் பெயர்ந்தது. இதன் பின் Edison இன் மின் விளக்கு பற்றிய ஆய்வு ஆரம்பம் ஆனது.

Edison with Phonograph

     மின்விளக்கு பற்றிய ஆய்வுக்காக J.B.Marcan குழுவினர் நிதியுதவி செய்தனர். Edison உடன் பிரின்ஸ்டன் பல்கலைகழக பட்டதாரியான 26 வயது Francis Upton இணைந்து கொண்டார். இவர் Edison இக்கு பேருதவியாக இருந்தார். இந்த ஆராய்சிக்காக 50 வேலையாட்களை களம் இறக்கி இருந்தான் Edison. கிட்டத்தட்ட 1500 ஆய்வுகள் தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக 21st October 1879 ஆம் ஆண்டு இவரின் வெற்றி உறுதியானது. இவரது கண்டுபிடிப்பு உலகத்தையே ஒளிமயமாக்கியது.
      Phonography எப்படி காதுக்கு ஒலியை கொண்டு சேர்கிறதோ அவ்வாறே கண்ணனுக்கு ஒளியைகொண்டு சேர்க்க பேசும் படங்களை உருவாக்கும் திரைப்பட கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். 1888 இல் முதன் முதலாக திரைப்பட கருவியை உருவாக்கினார். அதன் பெயர் Kinetoscope என அழைக்கப்பட்டது. இதன் படம் சற்று மங்களாகவே தெரிந்தது. இதன் பின் இவரது கண்டுபிடிப்புகள் டைனமோ, X-ray Machine என்று இவரது கண்டுபிடிப்பின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
 
Edison with Family
     Edison 1871 இல் Mary Stilwell என்ற 16 வயது பெண்ணை திருமணம் முடித்தார். இதன் மூலம் இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். Marion, Thomas மற்றும் William ஆகும். 1884 ஆம் ஆண்டு மூலையில் கட்டியின் காரணமாக Mary Stilwell இறந்தார். பின் தன்னைவிட 19 வருடங்கள் இளமையான Mina Miller என்பவரை திருமணம் செய்தார்.

     18th October 1931 இல் தனது 84 வது வயதில் எடிசன் நீரிழிவு நோயினால் இறந்தார்.  இதற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக America முழுவதும் ஒரு நிமிடம் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. இவர் இறந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள் இன்றுவரை வாழ்ந்து கொண்டேதன் இருக்கிறது.

     இவருக்கு கிடைத்த விருதுகளின் குறிப்பிட்ட சிலவற்றின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

      1.      Matteucci Medal in 1887.
      2.      John Scott Medal in 1889
      3.      Edward Longstreath Medal in 1899
      4.      John Fritz Medal in 1908
      5.      Franklin Medal in 1915
      6.      Navy Distinguished Medal in 1920
      7.      American Institute of Electrical Engineer in 1923
      8.      National Academy of Science in 1927
      9.      Congressional Gold Medal in 1928

Thomas Alva Edison பற்றிய முழுமையான ஒரு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆக்கத்தில் பார்த்தோம். இது சம்பந்தமான சந்தேகங்கள் கருத்துகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH
      

Post a Comment

Previous Post Next Post