ICT மனிதவியலில் ஏற்படுத்திய தாக்கம்


ICT இன் பிரயோகங்கள்

Usage of ICT - Impact of ICT on Humanities.


     ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் தரவுகளை தயார் செய்து தகவல்கள் பெறுவதையும் பரிமாறிக்கொள்வதையும் நடைமுறையாக கொண்டுவந்துள்ளான். இந்த செயல்பாட்டில் அவன் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. இதுவே அவனை அடுத்தகட்டத்துக்குள் கொண்டு சேர்த்தது. அதுதான் ICT (Information Communication Technology) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு  வித்திட்டது.

தற்காலத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயனை அனுபவிக்காத நபரோ இடமோ இல்லை என்று கூடலாம். நாம் இப்போது ICT பிரயோகப்படும் துறைகளை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்.

ü     கல்வி
ü     மின்னரசாங்கம்
ü     கைத்தொழில்
ü     வியாபாரம்
ü     பொழுதுபோக்கு
ü     போக்குவரத்து
ü     விவசாயம்
ü     சுகாதாரம்

v  கல்வித்துறை :

Usage of ICT - Impact of ICT on Humanities.


புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்து கிணத்து தவளையாக இருந்த காலம் மாறி முழு உலகத்தையே  பார்பதற்கான வசதி வந்துவிட்டது. உங்களது அனைத்து தேவைபாட்டையும் உங்கள் உள்ளங்கை அசைவின் மூலமே கட்டுப்படுத்தும் வரத்தை இந்த தகவல் தொழிநுட்ப முன்னேற்றம் நமக்கு தந்துள்ளது.

ICT இன் பயன்பாடானது கல்வியில் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்திலும் கல்விபயிலும் வசதியை எமக்கு வழங்கி உள்ளது. இதற்காக பாடசாலை இணையம் (www.edulanka.lk), அறிவகம் (www.nenasala.lk) போன்ற வசதிகள் காணப்படுகின்றன. மேலும் ஆசிரியருக்கு கற்பிக்க உதவும் மற்றும் கற்றல் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கும் வழிகாட்டுகின்றது, எல்லோரும் உயர்கல்வியை பெறுவதற்கான செயற்திட்டங்களையும் பெற்றுக்கொடுகின்றது.

v  மின்னரசங்கம் : (E-Government)

Usage of ICT - Impact of ICT on Humanities.

ஒரு அரசாங்கம் ICT ஐ பயன்படுத்தி தனது நாட்டிற்குள் இருக்கும் கம்பனிகள் அரச சார்பான அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் வேறு நாட்டு அரசாங்கங்கள் போன்றவற்றுடன் தொடர்பாடலை பேணுவதையே மின்னரசாங்கம் என கூறலாம்.

இலங்கை மின்னரசாங்கத்தில் தகவல் தொடர்பாடலை மேற்கொள்ள பின்வரும் இணையதளங்கள் பயன்படுகின்றன.

1)                        இலங்கை அரசாங்கத்தின் வலைப்பக்கம்
2)                        அரசாங்க தகவல் மையம்
3)                        தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் நிலையம் (ICTA)

மின்னரசங்கதின் தொடர்புடமைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(1)   G to C (Government to Citizen)
(2)   G to G (Government to Government)
(3)   G to B (Government to Business)
(4)   G to E (Government to Employee)

v  சுகாதார துறை :


Usage of ICT - Impact of ICT on Humanities.


சுகாதாரத்தை பேணுவதில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அளப்பெரியது. அவற்றை பின்வருமாறு வகைப்படுதலாம்.

i)        மருத்துவ பரிசோதனை :
·         காந்தபிரிவு விம்பக பொதி (MAR)
·         மின் இதயவரை பொதி (ECG)
·         மின் மூளைய வரைபியற் பொதி (EEG)
·         கணணிப்படுத்திய உடலின் அச்சுப்படை X-1 கதிர் பொதி (CAT)

ii)      தொலைமருத்துவம் :
·         வீட்டில் இருந்து சிகிச்சை
·         அறிவுறுத்தல்களை பெறல்
·         தொலை அறுவைசிகிச்சை
·         தொலைப்பயிட்சி
·         தொலைசிகிச்சை பராமரிப்பு  

v  விவசாயம் :

Usage of ICT - Impact of ICT on Humanities.

அனைத்து துறைகளிலும் மிதமிஞ்சி உள்ள ICT ஆனது விவசாயதுறையையும் விட்டுவிடவில்லை. ஏர்பிடித்து உழுத விவசாயிகள்  இயந்திரத்தில் உழுத காலம் இது.

விவசாயத்தில் ICT ன் பயன்பாடை பின்வருமாறு நோக்கலாம்.
1.      வானியல் அளவீட்டு இயந்திரம்’
2.      தன்னியக்க வண்டு கட்டுப்பாடு இயந்திரம்
3.      நிலத்தின் நிலையை அளவிடும் இயந்திரம்
4.      சொட்டுமுறை நீர் வளங்கள்
5.      தன்னியக்க களை அகற்றும் இயந்திரம்
6.      Robot தொழில்நுட்பத்தின் மூலம் பயிரிடுதல், அறுவடை செய்தல்.

v  வியாபாரம் :


Usage of ICT - Impact of ICT on Humanities.




வியாபாரத்தை பொறுத்தவரை அதன் பயன்பாடு நாடுகடந்த சேவையாக இருக்கிறது. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1.      உற்பத்தி பொருட்களை பொதி செய்தல்
2.      உற்பத்தி பொருட்களின் பொதியுறை செய்தல்
3.      கணணி உற்பத்தி
4.      வாகன உற்பத்திகள்
5.      இயந்திர உதுரிப்பகங்கள்.

v  போக்குவரத்து :


Usage of ICT - Impact of ICT on Humanities.



போக்குவரத்திலும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு கையோங்கியே இருக்கின்றது. அவற்றை இதில் நோக்கலாம்.
1.      CCTV கட்டுப்பாடு
2.      மின்சைகைகள்
3.      அடையாளக்குறியீடு
4.      விமான போக்குவரத்து
5.      இலத்திரனியல் புகையிரதம்


v  பொழுதுபோக்கு :


Usage of ICT - Impact of ICT on Humanities.


இதை நான் கூறவே தேவையில்லை ஏன் என்றால் இதன் பயன்பாடு பாமரமக்கள் கூட அறியும் அளவுக்கு உள்ளது. இதற்கு காரணம் Social Media களின் வளர்ச்சியாகும், இதை பயன்படுதவர்கள் இல்லை என்றே கூறும் அளவுக்கு இதன் உபயோகம் வளர்ந்துள்ளது. இன்று பாதி பேருடைய பொழுதுபோக்கு இதுவாக மட்டுமே இருக்கும்.

மேலும் சிலவற்றை கீழே பார்க்கலாம்.
1.      Computer Games
2.      Songs & Movies
3.      Photo Capture
4.      E-Book



இவ்வாறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு மனிதனின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அதன் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளதை நம்மால் உணரமுடியும்


இந்த ஆக்கமானது உங்களுக்கு ICT இன் பயன்பாட்டில் நாம் உள்ளதை மிகதெளிவாக உணர்த்தி இருக்கும். உங்களுக்கு இந்த கட்டுரையானது பிடித்து இருந்தாலோ அல்லது குறைபாடுகள் இருந்தாலோ எங்களுடன் Comment வழியாக பேசுங்கள். உங்களுக்காகவே நாம்.

நன்றி

தமிழல் இணைவோம்

Big Bit Tech


4 Comments

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2