WhatsApp உருவான கதை உங்களுக்கு தெரியுமா ?
இன்று எண்ணிலடங்காத
பயனாளர்களை கொண்டு காணப்படுகின்ற ஒரு Social Application தான் இந்த WhatsApp
. இன்று Bank யில் Account இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனா WhatsApp யில் ஒரு
Account இல்லாதவர்கள் இருக்கவே முடியாது.
WhatsApp உருவாக்கத்தில் முன்னோடியனவர்கள் தான் Jan Koum மற்றும் அவரது
நண்பர் Brian Acton. இவர்கள் இருவருமே Yahoo நிறுவனத்தின்
வேளைபுரிந்த சாதாரண ஊழியர்கள். இவ்விருவர்களின் கூட்டு முயற்சியே WhatsApp.
![]() |
BRIAN ACTON & JAN KOUM |
அவ்வாறான ஒரு பிரபல்யமான
நிறுவனத்தின் ஆரம்ப கதை ஒரு சோகமான சூழலில் பிறந்தது என்று எதனை பேருக்கு
தெரியும். இன்று நாம் அந்த கதையினை இந்த ஆக்கத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளுவோம்.
WhatsApp உருவாக்க மிக முக்கியமானவர் தான் Jan Koum. இவர் Ukraine யில் ஒரு Rural
Area வில் தான் பிறந்தார். அவர்
இருந்த இடத்தில் அவரால் சரியான முறையில் தனது வாழ்க்கையை கொண்டுபோக முடியவில்லை.
ஒரு அடிப்படை வசதி கூட இன்றி மிகவும் சிரமப்பட்டர்.
இந்த நிலையில் JAN KOUM தனது அம்மா மற்றும் பாட்டியுடன் California வில்
இல்ல Mountain view என்ற நகரத்திற்கு 1992 யில்
இடம்பெயர்ந்தார். இந்த இடம்பெயர்வு தான் JAN KOUME இக்குள்
இருந்த Computer திறனை வளர்த்து அதில் உள்ள ஆர்வத்தையும் தூண்டியது.
அதிகமா Computer Networking சம்பந்தமான புத்தகங்களை படிக்க தொடங்கிய JAN KOUM முழுமையாக அதனை கற்று தேர்ந்தார். இந்த நேரத்தில் JAN KOUM ஒரு Shopping
Center யில் Cleaner ஆக பணிபுரிந்தார். இதே நேரம் இவரது தாய் ஒரு குழந்தைகள் காப்பகத்தில்
பணியாற்ற இவர்களது குடும்ப சூழ்நிலை ஒரு சீரான நிலைக்கு வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இவர்களது
சந்தோசம் அதிகரித்து வர அதற்கு முட்டுக்கட்டையாக இவரது தாய்க்கு Caner இருப்பது தெரிய வந்தது. ஆனாலும் எதற்கும் தளராத JAN KOUM தான் Computer
Network சம்பந்தமான
அனைத்தையும் கற்று தேர்ந்த பின் தனது அடுத்த இலக்காக இருந்த Computer Language மீது இருந்த ஆர்வம் SAN JOSE STATE UNIVERSITY யில் Programming துறையில் இணைத்துக்கொண்டார்.
இவ்வாறு இருக்கும் பொது JAN KOUME இக்கு கிடைத்த மிக பெரிய ஒரு வாய்ப்புதான் Yahoo நிறுவனத்தில் INFRASTRUCTURE
ENGINEER ஆக பணிபுரியும்
சந்தர்ப்பம். இவ்வாறு தனது கற்கையை தொடர்ந்து கொண்டு பணியிலும் தீவிரம் காட்டினார்.
இந்த நிலையில் இப்போது தனது கற்கையை விட்டு விட்டு முழுநேரமும் Yahoo வில் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு அவரது அம்மா Cancer நோயினால்
மரணமடைந்தார். அம்மாவை இழந்த JAN KOUM தனித்து
நின்ற சந்தர்பத்தில் அவருக்கு உருதுனையாக BRIAN ACTON ஒரு நல்ல
நண்பராக இருந்தார். இருவரும் ஒரே நிருவனத்தில் வேலை செய்வதனால் JAN KOUM யின் தனிமையை BRIAN ACTON ஆள் இலகுவில் போக்க முடிந்தது.
இருவரும் Yahoo வில் சுமார் 9
வருடகாலம் பணிபுரிந்தனர். இந்த நிலையில் தான் என்ன என்ன கற்று கொள்ள
முடியுமோ அனைத்தையும் கற்று ஒரு முழு அனுபவமிக்க மனிதர்காளாக இருந்தார்கள். இந்த
தருணத்தில் தான் JAN
KOUME வாங்கிய புது IPHONE அவறுக்கு திருப்புமுனையாக இருந்தாது. அதில் APP STORE யில் புது புது Application வெளியிடப்படுவதை அவதானித்தார்.
இந்த சிந்தனை தான் அவரை WhatsApp
ஐ உருவாக்க அடித்தளம் இட்டது.
என்ன தான் ஆலோசனைகள்
இருந்தாலும் அவரது திட்டம் அடிமட்டத்திலேயே இருந்தது. அனால் தான் உருவாக்கும் இந்த
படைப்பிற்கு என்னதான் மாற்றம் நடந்தாலும் தான் மனதில் உள்ள 3 நிபந்தனைகளை மாற்றக்கூடாது என நினைத்தார். அது விளம்பரங்களை பதிவிடக்கூடது,
சிறந்த User Interface மற்றும் வாடிக்கயாளர்களின் தகவல்கள் சேமிக்கப்படக்கூடாது. இந்த நிலையை
இவர் எந்த சூழலிலும் மாற்றவே இல்லை.
JAN KOUM தனது திட்டத்தை எல்லாம் ஒரு வழிமுறைப்படுத்திய பின் தனது பிறந்தநாள்
அன்று 24th
February 2009 யில் ‘WHATSAPP’ என்ற பெயரை பதிவுசெய்தார். இனி JAN KOUM உம் BRIAN ACTON உம் தங்களது புது Application ஐ உருவாக்குவதில் மும்முரம்
காட்டினார்கள். அனால் அவர்கள் பணியை ஆரம்பிச்சி கொஞ்ச காலத்திலேயே அவர்களது Application செயழிலப்பதை உணர்ந்து இந்த பணியை நிறுத்தலாம் என்ற நிலைக்கு JAN KOUM தள்ளப்பட்டார்.
ஆனால் BRIAN
ACTON வழங்கிய ஆறுதலால் பணியினை தொடர்ந்தார்.
இந்த நிலையில் Apple நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்த PUSH NOTIFICATION இவர்களுக்கு
மிக உதவியாக இருந்தது. இந்த நிலையில் WhatsApp யின்
வளர்ச்சி மந்த கதியில் இருந்த போது BRIAN ACTON தனது
நண்பர்களுடன் கலந்து பேசி $250,000.00
நிதியினை திரட்டினார். இந்த இலையில் BRIAN ACTON WhatsApp உடைய Co-Founder
ஆக முன்னேறினார்.
இந்த நிலையில் மக்களிடம் பாரிய வரவேற்பை பெற்ற WhatsApp 2014 ஆம் ஆண்டு காலபகுதியில் அதிகளவான வளர்ச்சியை பெற்றது. இந்த நிலையில் WhatsApp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை Billion ஐ
தொட்டது. அனால் அந்த Company
யில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் 55 ஆகவே இருந்ததுடன் அவர்களால் சிறப்பான சேவையையும் வழங்க முடிந்தது.
![]() |
WhatsApp Office |
இந்த நிலையில் தனக்கு வேலையை நிராகரித்த Facebook நிறுவனமே தனது WhatsApp இணை வாங்க முன்வந்தது. Facebook ஆனது $19 Billion பணம் கொடுத்ததும் JAN KOUM ஐ Facebook Board of Directors ஆகவும் மாற்றியது. இந்த நிலையில் JAN KOUM தனது Agreement ஐ தனது தாயுடன் முத்திரைக்கு பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற கடைத்தொகுதியில்
வைத்து கையொப்பம் இட்டது அனைவரையும் நெகிழ்வடைய செய்தது.
இவர்களது Promotion
இல்லாமல் இந்த அளவு வளர்ச்சிக்கு
முக்கியபங்களிப்பை செய்தது ஒரு தரமான சேவையை இவர்கள் வழங்கியதே காரணமாகும்.
இவர்களது கடின உழைப்பும் நண்பர்களின் ஒத்துழைப்புமே இந்த நிலைக்கு இவர்களை இட்டு
சென்றது.
இந்த ஆக்கம் உங்களுக்கு ஒரு புது தகவலை தருவதோடு ஒரு ஊக்கத்தையும்
தந்து இருக்கும் என நாம் நம்புகிறோம். இது போன்ற இன்னும் புத்தம் புதிய வரலாற்று தகவல்களை
அறிந்துகொள்ள எங்களுடன் தொடர்ந்தும் இணைப்பில் இருங்கள்.
எமது ஆக்கம் தொடர்பான கருத்துகள் உங்களுடைய ஆதரவுகளை Comments வாயிலாக எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
History