பயனாளர்களின் ரகசியங்களை வெளியிடும் Alexa
கடந்த வாரம் Amazon
யின் ஒரு சாதனமான Alexa தனது பாவனையாளர்களின்
கலந்துரையாடல்களை பகிரங்கப்படுத்தி சர்ச்சையை உண்டாக்கி இருந்தது.
இந்த Alexa சாதனம் பார்ப்பதற்கு ஒரு Speaker போன்ற
தோற்றத்தில் காணப்படும் ஒரு Artificial Intelligence ஆகும். இந்த
சாதனத்தின் மூலம் வீட்டில் உள்ள அணைத்து Electronic Device ஐயும்
கட்டுப்படுத்தி பவனயாளரின் குரல் வழி கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும்.
மேலும் இதன் மூலமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தளத்தில்
விடையினை தேடி துல்லியமாக பதிலளிக்கிறது. கடந்த வருடம் மாத்திரம் இந்த சாதனத்தை 50000 இக்கும் அதிகமான மக்கள் வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் ஒரு
தம்பதிகளுக்கிடையில் இடம்பெற்ற உரையாடல் இன்னொரு நபருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இதனை பெற்ற நபர் கலந்துரையாடல் மேற்கொண்ட நபருக்கு அறிவித்ததை அடுத்து இந்த
பிரச்சினை பூதாகரமானது.
ஆனால் இந்த முறைப்பாட்டை
முற்றிலுமாக மறுத்த Amazon
நிறுவனம் இது அவர்களின் கட்டளைக்கு ஏற்பவே அவர்கள் கலந்துரையாடலை
இணையத்தளத்தில் பதிவேற்றி இருப்பதாக பதிலளித்தது.
இருப்பினும் மக்களின் அநேகமானவர்களின்
முறைப்பாடாக இந்த உபகரணத்தின் குறையை சுட்டி காட்டுகிறது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News