தரவு மற்றும் தகவல் (Data & Information) பற்றி
அறிந்து கொள்வோம்
தரவு
மற்றும் தகவல் விடயத்தில் நாம் மிகவும் குழப்பத்தில் தான் இருப்போம். கரணம்
எவற்றிற்கு இடையிலான வித்தியாசம் நாம் அறிந்து இருப்பதில்லை. பெரும்பாலானோர் இவை
இரண்டும் ஒன்றுதான் என்ற எண்ணத்தில் கூட இருப்போம் . இன்று நாம் இவை பற்றிய பூரண
விளக்கத்தை இந்த ஆக்கத்தில் பார்க்கலாம்.
·
தரவு :
தரவு என்றால் ஒழுங்கின்றி காணப்படும்
எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள், இலக்கங்கள் ஒரு கூட்டம் தான் தரவு ஆகும்.
பொதுவாக இந்த தரவுகளை வைத்து கொண்டு எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது.
இதனை ஒரு சிறந்த உதாரணத்தின் மூலம்
மேலும் விளங்கி கொள்ளலாம்.
Example :
சில மாணவர்கள் பாடத்தில் பெற்ற
புள்ளிகளின் விபரம் வருமாறு.
Nizmath : ஆங்கிலம்-70, தமிழ்-65,
கணிதம்-82, விஞ்ஞானம்-40
Zulfa : ஆங்கிலம்-93, தமிழ்-71,
கணிதம்-60, விஞ்ஞானம்-70
Zoya : ஆங்கிலம்-38, தமிழ்-40,
கணிதம்-28, விஞ்ஞானம்-52
Rilaan : ஆங்கிலம்-79, தமிழ்-73,
கணிதம்-48, விஞ்ஞானம்-62
மேல உள்ள விடயங்கள் வெறும் ஒரு
தரவாகவே உள்ளது இதில் இருந்து எந்த ஒரு முடிவையும் எம்மால் மேற்கொள்ள முடியாது.
இதனையே தரவு என்கிறோம்.
·
தகவல் :
தகவல் என்றால் இவ்வாறு
குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை முறைமை வழிக்கு உட்படுத்தி பெறுகின்ற ஒரு
ஒழுங்கமைக்கப்பட்ட விடயம் ஆகும். இவற்றை கொண்டு எந்த ஒரு தீர்மானத்தையும் இலகுவாக
மேட்கொண்டுவிடலாம்.
இதனை மேலே குறிப்பிட்ட உதாரணத்தை
கொண்டே விளக்கலாம்.
Example :
Name
|
English
|
Tamil
|
Maths
|
Science
|
Total
|
Average
|
Rank
|
Nishmath
|
70
|
65
|
82
|
40
|
257
|
64.5
|
3
|
Zulfa
|
93
|
71
|
60
|
70
|
294
|
73.5
|
1
|
Zoya
|
38
|
40
|
28
|
52
|
158
|
39.5
|
4
|
Rilaan
|
79
|
73
|
48
|
62
|
262
|
65.5
|
2
|
இந்த
தரவுகளை அடிப்படையாக வைத்து தகவல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து நாம்
தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.
·
ஆங்கில பாடத்தில் கூடிய, குறைந்த
புள்ளி எடுத்த மாணவன்.
·
தமிழ் பாடத்தில் கூடிய, குறைந்த
புள்ளி எடுத்த மாணவன்.
·
கணிதம் பாடத்தில் கூடிய, குறைந்த
புள்ளி எடுத்த மாணவன்.
·
விஞ்ஞானம் பாடத்தில் கூடிய, குறைந்த
புள்ளி எடுத்த மாணவன்.
·
கொடிய புள்ளிகள் எடுத்த மாணவன்.
·
ஒவ்வொரு மாணவர்களினதும் சராசரி
புள்ளிகள்
·
வகுப்பில் மாணவர்கள் பெற்ற நிலை.
ஆகவே தரவுகளை கொண்டு தீர்மானம்
எடுக்க தகவலாக மாற்றப்படுகின்றது. தரவு இல்லாமல் தகவலை உருவாக்க முடியாது. இந்த
ஒரு தீர்மானமும் எடுக்க முன்பாக தரவுகள் சேகரிக்கபடுகின்றன. அவதரி பின்
முறைமயாக்கி தீர்மானம் எடுக்க பயன்படுத்துகின்றனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH