தகவல் உலகில் கணனியின் பங்கு
(அலகு : 01)
அணைத்து மாணவர்களுக்கும் வணக்கம்,
இந்த அலகின் வாயிலாக நாம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆனது எம்
அனைவரினதும் வாழ்வியலில் எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதினை பூரணமாக
விளங்கிக்கொள்ள வழிவகுக்கின்றது.
இந்த பாடத்திட்டத்தை நீங்கள்
இலகுவாக விளங்கி கொள்ள நாம் உங்களுக்கு 4 வகையாக இந்த அலகினை
பிரித்து வழங்க இருக்கின்றோம்
1. தகவல்
தொடர்பாடல் மானிட வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றம். (Usage of Information Communication
Technology)
2. தரவு
மற்றும் தகவல்களை விளங்கி கொள்ளல். (Different of Data & Information)
3. கணனியின்
வரலாறு (History of the
Computer)
4. கணனிகளின்
வகைப்படுத்தல். (Kind of Computers)
இந்த வகையில் எமது BIG BIT TECH TAMIL
இணையத்தால் ஊடாக ஏற்கனவே இந்த மேற்கூறிய மூன்று பாட அலகுகளையும் விபரித்துள்ளோம்.
அவற்றிற்கான Link இணைய இந்த பக்கத்தில் இணைத்துள்ளோம். அவற்றினை பார்த்து விட்டு
நான்காவது பாகத்தினை (கணனியின் வகைப்படுத்தல்) இந்த பக்கதின் ஊடக கற்று கொள்ளுங்கள்.
1.1 தகவல் தொடர்பாடல் மானிட வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றம். (Usage of Information Communication
Technology)
1.2 தரவு மற்றும் தகவல்களை விளங்கி கொள்ளல். (Different of Data & Information)
1.3 கணனியின் வரலாறு (History of the Computer)
1.4 கணனிகளின்
வகைப்படுத்தல். (Kind of Computers)
கணனிகள் உருவான காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு பயன்பாடுகளுக்காக
அவற்றின் வடிவமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி
வந்துள்ளனர். அந்த வகையில் கணனிகளின் வகைகளை நாம் 5 பகுதிகளாக்க
பிரித்து நோக்குவோம்.
1. சந்ததி கணனிகள் (Generation of Computers)
2. அளவின் அடிப்படையில் (Size of Computers)
3. பயன்பாட்டின் அடிப்படையில் (Usage of Computer)
4. நோக்கத்தின் அடிப்படையில் (Purpose of Computer)
5. வடிவமைப்பின் அடிப்படையில் (Design of Computer)
01. சந்ததி கணனிகள் (Generation of Computers)
சந்ததி கணனிகள் பற்றிய ஒரு விளக்கத்தை நான்
உங்களுக்கு கணனியின் வரலாறு என்ற பாடப்பரபின் ஊடக கற்பித்து இருந்தேன் அதனது
சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.
சந்ததி கணனிகள் 05 வகையாக நோக்கப்படுகிறது.
01. 1ம் தலைமுறை கணனிகள் :
இவை சுமார் 1940 தொடக்கம் 1956 காலப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கணனிகள் ஆகும். இவற்றில் Vacume Tubes பயன்படுத்தப்பட்டன. இவற்றில் பிரபல்யமான கணனிகளாக UNIVAC & ENIAC பயன்படுத்தப்பட்டன.
02. 2ம் தலைமுறை கணனிகள் :
இவை 1956 தொடக்கம் 1963 வரையான காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் Transistor பயன்பாடு காணப்பட்டன. இவை Binary ஐ
அடிப்படையாக வைத்து இயங்கின.
03. 3ம் தலைமுறை கணனிகள் :
இத்தகைய கணனிகள் 1963 தொடக்கம் 1971 காலப்பகுதியில் பயன்பாட்டிற்கு வந்தன. இதில் IC (Integrated Circuit) பயன்படுத்தப்பட்டன.
04. 4ம் தலைமுறை கணனிகள் :
இவ்வகை கணனிகள் தற்போது பயன்பாட்டில்
உள்ள கணணிகலாகும். இவை 1971
காலப்பகுதியில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் Micro Processors பயன்படுத்தபட்டுள்ளன.
05. 5ம் தலைமுறை கணனிகள் :
இவை பெரும்பாலும் இப்போது
பாவனைக்கு வந்துள்ளன. இவற்றினை Artificial Intelligence என்று
அழைக்கின்றனர். இது தானாகவே பிரச்சினைகளுக்கு தீர்வெடுக்க கூடியதாக இருக்கும். Artificial Intelligence சம்பந்தமான பூரண விளக்கத்தை நான் ஒரு ஆக்கத்தின் வழியாக தந்துள்ளேன்.
அவற்றின் Link இணைய கீழே தருகிறேன் வசித்து அறிந்து கொள்ளுங்கள்.
Read More : Click the Picture
02. அளவின் அடிப்படையில் (Size of Computers)
அளவினை அடிப்படையாக கொண்டு கணனிகளை மூன்று
வகையாக பிரித்து நோக்க முடியும்.
01. தலைமை கணனி (Mainframe Computer) :
இவ்வகையான கணனிகள் இடப்பரப்பில் பாரிய அளவாக காணப்படும். இவை பாரிய நிறுவனங்களின் தனிப்பட்ட பாவனைகளுக்காக பயன்படுத்தப்படும்.
முக்கியமாக கணக்கெடுப்பு புள்ளி விபரவியல், நிறுவன வள திட்டமிடல், மொத்த தரவு
செயலாக்கம், பரிவர்த்தன செயலாக்கம் போன்ற பாரிய செயட்படுகளை செய்ய ஆரம்பகாலத்தில்
பயன்படுத்தப்பட்டது. இதனது பயன்பாடு தடகளத்தில் குறைவாகவே உள்ளது.
02. சிறு கணனி (Mini Computer) :
![]() |
First-generation Digital Equipment Corporation (DEC) PDP-8 on display at the National Museum of American History |
Data General Nova, serial number 1, the first 16-bit minicomputer, on display at the Computer History Museum |
![]() |
A PDP-11, model 40, an early member of DECs 16-bit minicomputer family, on display at the Vienna Technical Museum |
1960களின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டன. இத்தகைய கணனிகள் நடுத்தர அளவினை கொண்டதாகவே
உள்ளது. இதனை நடுத்தர வணிகங்கள் மற்றும் அறிவியல் பயன்பாட்டிற்காக
பயன்படுத்தப்படுகின்ற.
03. நுண் கணனி (Micro Computer) :
இவை அளவில் மிக சிறிதாக காணப்படும் கணனிகள் ஆகும். இவ்வகை கணனிகள் மலிவான விலையில் கிடைக்க கூடியவை. இவை குறைவான உள்ளீடு
மற்றும் வெளியீட்டு சாதனங்களை கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும்.
![]() |
A collection of early microcomputers, |
03. பயன்பாட்டின் அடிப்படையில் (Usage of Computer)
இந்த வகைக்குள் கணனிகளை 05 வகையாக பிரித்து
நோக்கலாம்.
01. தனிநபர் கணனி (Personal Computer) :
இந்த கணனிகள் தனிநபர்களின் பயன்பாடிற்காக
வந்தவைகலாகும். ஒரு தனிநபர் தனக்கு தேவையான அணைத்து செயற்பாடுகளையும் செய்வதற்காக
உபயோகப்படுத்த முடியும். நமது வீடுகளில் இன்று காணப்படுகின்ற PC or Desktop வகை கணனிகள் இவற்றில் உள்ளடங்கும்.
02. மடிக்கணனி (Laptop Computer) :
இவை இடத்திற்கிடம் கொண்டு செல்லகூடிய தன்மைகொண்டவை ஆகும். இவற்றில்
தன்னகத்தே மின்கலம் இணைக்கப்பட்டு இருப்பதால் வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்ல
முடியும்.
03. உள்ளங்கை கணனி (Palmtop Computer) :
இவ்வகை கணனிகள் நமது கையில் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு சிறிதாக
காணப்படும். இவை தன்னகத்தே Battery கொண்டுள்ளதால்
வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லமுடியும். மேலும் இத்தகைய கணனிகள் குறிப்பெடுக்க
பயன்படும் ஒரு Sub Note
Book ஆக பயன்படும்.
04. பணிநிலையக் கணனி (Workstation Computer) :
இவை ஒரு குறிப்பிட்ட சேவையை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட Personal Computers ஆகும். இவற்றை பொதுவாக விஞ்ஞான ஆராய்சிகள் மற்றும் வடிவமைப்பு
பகுதிகளில் பயன்படுத்துகின்றனர். இவை Local Area Network உடன் இணைத்து பல்வேறு நபர்கள் ஒன்றினைந்து வேலைசெய்ய உதவுகின்றது.
05. சேவையக கணனி (Server) :
இவை கணனி வலையமைப்பின் கீழ் உள்ள கணனிகளுக்கான சேவையினை வழங்க
உருவாக்கப்பட்டுள்ளன. இவை அதிக வேக திறன் கொண்டவையாகவும் கூடிய கொள்ளளவு திறன்
கொண்டவையாகவும் காணப்படுகின்றன. 20ம் நூற்றாண்டின்
நடுப்பகுதியிலேயே இத்தகைய கணனிகள் பாவனைக்கு வந்தன.
06. மீக் கணனி (Super Computer) :
இந்த கணனிகள் உயர்திறன் கொண்ட கணனிகளாக உள்ளது. ஒரு Super Computer யின் செயல்திறன் மில்லியன் அறிவுறுத்தல்களுக்கு செயற்படுகின்றது.
04. நோக்கத்தின் அடிப்படையில் (Purpose of Computer)
பொதுவாக நமது தேவைகளுக்கு ஏற்ப கணணிகளை பயன்படுத்துகின்றோம். அவற்றினை
நாம் 02 வகையாக பிரித்து நோக்கலாம்.
01. போது நோக்க கணனி (General Purpose) :
இவை பொதுவான பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன. யாவை தனிப்பட்ட
வேலைக்காகவே அல்லது ஏனைய நிறுவன வேளைகாகவோ பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் Personal Computers, Smart Phone ,
Laptop, Note Book & Tablets உள்ளடங்கும்.
02. விசேட நோக்க கணனி (Special Purpose) :
இந்த வகை கணனிகள் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட செயட்படுகளை செய்வதற்காக
வடிவமைக்கப்பட்டு இருக்கும். இவற்றின் மூலம் ஆராய்ச்சி நடவடிக்கைகள், வைத்திய
துறை, இராணுவ துறை, போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும். இவற்றின் செயற்பாடு
மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும்.
![]() |
IN ARMY BASE |
![]() |
IN HOSPITAL |
05. வடிவமைப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் (Technology Design of
Computer)
இத்தகைய கணனிகள் தொழில்நுட்பத்தின்
வடிவமைப்பிற்கு ஏற்ப 03 வகையாக பிரித்து நோக்கப்படுகின்றது.
01. இலக்க முறை கணனி (Digital Computer) :
இந்த வகை கணனிகள் குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்பதட்காகவே
பயன்படுத்தப்படுகின்றன. இவை Binary இணைய அடிப்படையாக் வைத்தே
இயங்குகின்றன. இவற்றினுள் Calculater,
Digital Watch, வேகமானி போன்றவை
உள்ளடங்கும்.
02. ஒத்திசைக் கணனி (Analog Computer) :
இந்த வகை கணனிகள் அடிக்கடி மாறக்கூடிய தரவுகளை
கணிப்பதற்காகபயன்படுத்தப்படுகின்றன. வெப்பநிலை, அமுக்கம், பூமி அதிர்ச்சி, போன்ற பௌதீக
விடயங்களை கணணிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
03. கலப்புக் கணனி
(Hybrid Computer) :
இவ்வகை கணனிகள் Analog & Digital கணனிகளின்
செயட்படுகளை ஒருமித்து காட்ட உருவக்கபட்டவையாகும். இவை Digital Computer யின் பணியையும் செய்யும் ,மற்றும் Analog Computer யின்
பணியையும் செய்யும்.
இந்த அலகின் வாயிலாக நீங்கள் கணனிகளின் வகைகளை முழுமையாக கற்று
இருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். மேலும் ஏனைய கற்றல் நடவடிக்கைகளில் எம்முடன்
இணைந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த படம் சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்களை எமது
ஆசிரியரிடம் கேட்பதாக இருந்தால் எம்மை தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Student