WhatsApp யின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை
குறுஞ்செய்திகள் பரிமாற்றத்தில் முதல்தர சமூக வலையமைப்பாக காணப்படும் WhatsApp நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் தனது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையினை அறிமுகப்படுத்த உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் WhatsApp மூலமான பணப்பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் அதன்
மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் முகமாகவே
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக WhatsApp தரப்பில்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சேவையானது எதிர்வரும்
வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையினை WhatsApp நிறுவனம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மூலமாக மேற்கொள்ள
எதிர்பார்த்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News