Apple Pay யின் சேவை இப்போது நோர்வே நாட்டிற்கும்.
Apple நிறுவனம் தனது சேவை மற்றும் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கொள்வனவு
செய்வதற்காகவே இந்த முறையினை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த சேவை முதல் முதலாக
அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு அறிமுகபடுத்தி இருந்தது.
இதனை அடுத்து பல்வேறு
நாடுகளுக்கு இதன் சேவை பரப்பானது விஸ்தரிக்கப்பட்டிருந்தது.. இந்த வரிசையில் நோர்வே
தற்போது 29 ஆவது நாடாக இணைந்துள்ளது.
கடந்த வருடத்தில்
மாத்திரம் அநேகமான ஐரோபிய நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
அந்த வரிசையில் இப்போது நோர்வேயும் சேர்ந்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News