உலகின் முதல் குறுந்தகவல் சேவையான Yahoo Messenger நிறுத்தம்
உலகின் முதலாவது
குறுந்தகவல் சேவையான Yahoo
Messenger தனது சேவையை நிறுத்த
உள்ளதாக Oath Inc நிறுவனம் தெரிவிதுள்ள்ளது. 09.03.1998 ஆண்டு அறிமுகபடுதபட்ட
இந்த சேவை அந்த காலகட்டத்தில் மிக பிரபல்யமாக காணப்பட்டது.
இந்த அதிரடி முடிவிற்கு
காரணம் ஏனைய போட்டி நிறுவனங்களின் ஆதிக்கதிற்கும் போட்டிற்கும் முகம்கொடுக்க
முடியாத சூழ்நிலையே என கூறப்படுகின்றது. இந்த
சேவையானது எதிர்வரும் July
17 உடன் நிறுத்த எதிர்பார்த்துள்ளதாக Oath Inc கூறியுள்ளது.
இருப்பினும் Yahoo வின் இதர சேவைகள் அனைத்தும் தொடந்து இடம்பெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பாடலில் புதிய மாற்றங்களை கொண்டுவர
இருப்பதாகவும் வாடிக்கயாளர்களின் தேவையறிந்து செயற்பட இருப்பதாகவும்
அறிவித்துள்ளது.
இந்த நிலையில்
அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு Yahoo Messenger யின் Chat History இணை பதிவிரக்கிகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம்
இறுதியில் Oath Inc நிறுவனம் AOL
Instant Messenger சேவையினை நிறுத்தி
இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News