வதந்திகளை தடுக்க WhatsApp எடுத்த புதிய முயற்சி

வதந்திகள் அதிகமாக பரப்பப்படுவது சமூக வலைதளங்கள் மூலமாகவே என பல்வேறு ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. அந்த வகையில் பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் அவற்றை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.


அந்த வகையில் WhatsApp நிறுவனம் தற்போது வதந்திகள் பரவாமல் இருக்க  சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அவற்றினை பற்றி பார்ப்போம்.


**** WhatsApp வழங்கயுள்ள அறிவுறுத்தல்கள் ****

  • பதியப்பட்ட தகவல் புதிதானதா ? அல்லது Forward செய்யப்பட்டதா என அறியும் புதிய முயற்சி ஆராயப்பட்டு வருகின்றது. அந்த வசதி WhatsApp யில் வரும்பட்சத்தில் அத்தகைய தகவல்களை ஒன்றுக்கு இரண்டு தடவை பரீட்சித்து பார்க்க வேண்டும்.

  • புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் பார்க்கும் சந்தர்ப்பங்களில் அவற்றினை பற்றி இணையத்தளத்தில் தேடிப்பாருங்கள். தகவல்கள் பல இடங்களில் தோன்றும் இடத்து அவை பெரும்பாலும் உண்மைத்தன்மை கொண்டவையாகாவே இருக்கலாம்.


  • நம்பவே முடியாத தகவல்கள் பகிரப்படும் சந்தர்பத்தில் அவற்றின் மீதான நம்பிக்கைய கைவிடுவது அவசியமாகும்.

  • ஒருவரை கேவலப்படுத்தும் மற்றும் மனதை காயப்படுத்தும் வகையில் அமைந்த பதிவுகளை கூடிய வரை பகிர்வதற்கு முன் நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்.


இத்தகைய தகவலானது இந்தியாவில் குழந்தைகளை கடத்தல் தொடர்பாக பரவிய வதந்திகளால் 30இக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்திய மதிய அரசாங்கம் WhatsApp இடம் கேடுகொண்டமைக்கு இணங்க இந்த அறிவுறுத்தல்களை பயனர்களுக்கு WhatsApp வழங்கி உள்ளது

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


Post a Comment

Previous Post Next Post