பிரபல தேடுபொறி இணையதளமான Google யில் முட்டாள் என தேடினால் அதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புகைப்படம் தோன்றுவது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Google தனது Algorithm இணை பயன்படுத்தியே தனது தேடுபொறியில் தரமான தகவல்களை ஒன்றுதிரட்டி வருகின்றது. ஆனால் சிலரின் குற்றச்சாட்டு இந்த Algorithm சரியான முறையில் தொளிட்படவில்லை என்பதாகும்.
இந்த வகையில் Google யில் "Idiot" என தேடினால் டொனால்ட் டிரம்ப்பின் புகைப்படம் தோன்றியது. இதற்கு அவர்மீது அதிருப்தி அடைந்த ஒரு சிலரினால் தான் இந்த தவறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் Reddit என்ற சமூக வலைதளதில் டொனால்ட் டிரம்ப்பிற்க்கு முட்டாள் என்ற பதத்தினை பயன்படுத்தி அதிகமாக பகிர்ந்தமையே இதற்கு காரணம், என குறிப்பிடப்படுகின்றது.
இதனை ஆன்லைன் போராட்டம் என்ற தலைப்பின் கீழ் சேகரித்த Google யின்Algorithm இதனை Google யின்தேடுபொறியில் சேர்த்துவிட்டது. இந்த விடயமே டொனால்ட் டிரம்ப்பிணை ஒரு முட்டாளாக சித்தரிக்க காரணமாக இருந்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News