மல்யுத்த வீரர் ரொக் அறிமுகப்படுத்தும் புதிய Headsetமுன்னாள் WWE Champion ஆனா மல்யுத்த வீரர் செல்லமாக Rock என அழைக்கப்படும் டிவைன் ஜோன்சன் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்து கொண்டு இருக்கிறார்.


இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பு திறமையும் கலகலப்பான நகைச்சுவை பேச்சும் இவரது உடல் அமைப்பும் அனைவரையும் கவர்ந்த ஒன்றே. இதுவே இவரின் நடிப்பு துறைக்கு மூலாதாரமாக இருந்தது.அதிக சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் தனியாக உடட்பயிட்சி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றார்.


இந்த வகையில் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களில் கைகோர்த்துள்ள டிவைன் ஜோன்சன் அந்த துறையிலும் உச்சம் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் "அண்டர் ஆர்மர்" என்ற நிறுவனம் ஒன்று டிவைன் ஜோன்சன்  உடன் கைகோர்த்துள்ளது.


இந்த நிறுவனம் டிவைன் ஜோன்சன் பயன்படுத்தும் அணைத்து உபகரணங்களிலும் மிக பிரபல்யமான எருமையின் முகத்தினை கொண்ட சின்னத்தை கொண்டு அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளது.அந்த வகையில் தற்போது எருமையின் சின்னத்தினை கொண்ட ஒரு அருமையான Headset இணை வெளியிட்டுள்ளது.  இந்த Headset ஒரு கம்பீரமான அட்டகாசமான தோற்றத்தை கொண்டுள்ளது.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

Post a Comment

Previous Post Next Post