Online மூலமாக சகல மொழி பாடல்களையும் கேட்டு மகிழ ஒரு முன்னணி Application ஆக திகழும் இணையத்தளமே இந்த Spotify ஆகும்.
இந்த இணையத்தளமானது தங்களது வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலவசமான பதிப்புகளையும் மற்றும் கட்டணம் செலுத்தும் Premium பதிப்புகளையும் வழங்குகின்றது.
தற்போது வரை இந்த இணையத்தளமானது சுமார் 83 மில்லியன் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டின் முதலாவது காலண்டினை பார்க்க இந்த ஆண்டின் 3 ஆவது காலண்டில் பெற்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 8 மில்லியன் அதிகமாகும்.
மேலும் மாதாந்த செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 180 மில்லியன் எனவும் Spotify சார்பில் கூறப்படுகின்றது மேலதிக சிறப்பம்சமாகும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News