5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக Verizon நிறுவனம் அண்மையில் குறிப்பிட்டு இருந்தது.
இதனை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களுடைய 5G வலையமைப்பினை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
ஆனால் சில நாடுகள் 5G வலையமைப்புகளை உருவாக்குவதை பிற நாடுகளுக்கு கொடுப்பதில் தாமதித்து வருகின்றது.
இதற்குக் காரணம் தம் நாட்டினுடைய இரகசிய தகவல்கள் அனைத்தையும் வலையமைப்புகளின் ஊடாக பிற நாடுகள் அறிந்து கொள்ளக் கூடும் என்பதே ஆகும்.
அனேகமான வலையமைப்பு உருவாக்கத்தில் சீன நிறுவனமான HUAWEI மற்றும் ZTE ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை அந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு தங்களது படைப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ளன.
இந்த வகையில் ஆரம்பத்தில் அமெரிக்கா இந்த சீன நிறுவனங்களை புறக்கணித்திருந்தது. தற்போது இந்த வரிசையில் அவுஸ்திரேலியா நாடும் சேர்ந்துள்ளது.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News