நமது அன்றாட வாழ்க்கை நடைமுறையில் ஸ்மார்ட்போனின் பயன்பாடானது ஒரு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. தொழில்நுட்ப உலகத்தின் அனைத்து விடயங்களையும் ஒரு உள்ளங்கைக்குள் உள்ளடக்க முடியுமாக இருந்தால் அது ஸ்மார்ட்போனாக மட்டுமே இருக்க முடியும்.
இவ்வாறு அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற ஸ்மார்ட்போன் ஆனது எம்மை ஒரு அடிமை வாழ்வுக்கு தள்ளி உள்ளது என்று தான் கூற வேண்டும். ஆனால் இதன் மூலம் ஏற்படுகின்ற தீங்கான விடயங்களை நாம் எப்போதும் அறிந்திருப்பதில்லை. இதனால் வருகின்ற பின்விளைவுகள் ஒவ்வொன்றையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
இந்த பதிவின் ஊடாக ஸ்மார்ட்போன் பாவனை மூலம் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி சிறிது நாம் கலந்துரையாடலாம்.
1. தூக்கமின்மை பிரச்சனை தற்போது அதிகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்குப் பிரதான காரணமே இந்த ஸ்மார்ட்போன் பாவனைதான். நீங்கள் அதிகமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய ஸ்மார்ட் போன்களில் இருந்து நீல நிற கதிர்வீச்சுக்கள் வெளியாகின்றன. இந்த கதிர்வீச்சுகள் மூளையின் செல்களின் தொழிற்பாடுகளை அதிகரித்து ஒரு தூக்கமின்மை தன்மையினை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே அதிகமான இளைஞர்கள் தூக்கமின்மை நோயினால் தற்போதைய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. காதலர்கள் ஆகட்டும் நண்பர்கள் ஆகட்டும் கணவன்-மனைவி ஆகட்டும் அனைவரும் அதிகளவாக கலந்துரையாடல்களை இந்த ஸ்மார்ட்போனின் ஊடாகவே மேற்கொள்கின்றனர். இதிலிருந்து வெளியாகின்ற ஒளிக்கற்றைகள் நமது மூளையை பாதிப்பது பற்றி நாம் அறிந்திருப்பது இல்லை. இவற்றின் மூலம் எமது மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாவதற்கு நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோம். இதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் உரையாடல்களை வலது காதின் ஊடாக மேற்கொள்ளாமல் இடது காதினை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3. கர்ப்ப காலத்தில் பெண்கள் ஸ்மார்ட்போனினை அதிகமாக பயன்படுத்துவது அவர்களது குழந்தை வளர்ச்சிக்கு தடங்கலாக அமையலாம். கர்ப்ப காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாகவே காணப்படுகின்றது. இது இலகுவாக அந்த பெண்ணின் மூலம் அந்த குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற நோய் ஏற்பட காரணமாக அமைகின்றது.
4. மாணவர்கள் அதிகமாக ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவதன் மூலம் முன்னரே கூறியது போன்று தூக்கமின்மை போன்ற நோய்க்கு உள்ளாகின்றனர். மேலும் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்குகின்ற பாரியளவு நேரத்தினை ஸ்மார்ட் போனிலேயே கழிக்கின்றனர். இதன் மூலம் ஞாபக சக்தி இன்மை அதிகளவு ஏற்பட காரணமாக அமைகின்றது.
5. மேலும் இளவயதுப் பெண்கள் அதிக அளவு ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவதனால் அவர்களது பருவ வளர்ச்சி மாற்றம் வேறுபடுகின்றது. இந்த செயற்பாடானது சிறுவயதிலேயே பூப்படையும் தொழிற்பாட்டை ஆரம்பிக்க காரணமாக அமைகின்றது.
மேலே நாம் கூறிய பல்வேறு காரணங்கள் எம்மை ஸ்மார்ட்போன் அடிமைப்படுத்தி வைத்திருப்பதாலேயே ஏற்படுகின்றது. இதனை கடந்து வரவேண்டிய கட்டாய சூழ்நிலையிலேயே நாம் அனைவரும் உள்ளோம்.
மேல் குறிப்பிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்ற கால அளவினை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக வேண்டி கூகுள் ப்ளே ஸ்டோரில் கூட பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்ற கால அளவினை வரையறுத்துக் கொள்வோம்.
நோய் வரும்முன் காப்போம் என்ற பழமொழியானது இந்த விடயத்தில் மிக பொருத்தமானதாகவே காணப்படுகின்றது. ஆகவே எமது ஆரோக்கியத்தில் நாமே கவனம் செலுத்த வேண்டும்
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech News