கூகுள் நிறுவனமானது கடந்த மாதம் பிற நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நடந்ததாக கூறி 5000 கோடி டொலரிணை தண்டப்பணமாக செலுத்தி இருந்தது.
இந்த முறை நாம் ஒரு இடத்தினை அறிய பயன்படுத்தும் GPS Location APPLICATION ஐ தவறான முறையில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Google Map ஐ பயன்படுத்தும் போதும் இன்னபிற அப்ளிகேஷன்களை செயல்படுத்துவதற்காக வேண்டியும் இந்த Location நாம் ON செய்து வைப்போம். தேவையற்ற நேரங்களில் off செய்து வைக்கவும் முடியும்.
ஆனால் இவ்வாறு OFF செய்த பின்னும் நாம் உள்ள இடத்தை கூகுள் நிறுவனத்தினால் அறிந்து கொள்ள முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றினை ஆய்வு செய்த செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது Android பயனர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிளின் ஐபோன் வகைகளை பயன்படுத்துபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இவ்வாறு வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டமை தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் சார் ஏனைய செய்திகளை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News