நாசாவினால் அமைக்கப்பட்ட வானில் உலவிவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையம் தான் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் ஆகும்.
இது விண்ணில் இடம்பெறுகின்ற மாற்றங்களை கண்காணிக்கவும் அரிசிகளை நடத்தவும் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களும் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையமானது மணிக்கு 1700 மையில்கள் என்ற வேகத்தில் புவியை சுற்றி வருகின்றது. அதாவது ஒரு செக்கனிற்கு 5 மையில்கள் கடக்கின்றன.
இது சாதாரணமாக புவியை முழுமையாக சுற்றி வர 92 நிமிடங்கள் எடுக்கின்றன. அதனால் ஒரு சில நிமிடங்களுக்கு மாத்திரமே இதனை வேற்றுக்கண்ணில் விண்ணில் அவதானிக்க முடியும்.
இந்த சர்வதேச மையத்திற்கான பிரதான சிறப்பியல்பே விண்ணில் உள்ள மூன்றாவது பிரகாசமான பொருள் என்பதாகும். இது சூரிய ஒளியை புவியை நோக்கி தெறிக்க செய்வதால் இந்த பெருமையை பெறுகின்றது.
இவ்வாறு வேகமாக புவியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நீங்களும் பார்க்கும் வைப்பை நாசா நிறுவனம் வழங்கயுள்ளது.
இதற்காக வேண்டி "Spot the Station" என்ற இணையதள சேவையை தொடக்கி உள்ளது. இந்த இணையத்தளத்தில் நுழைந்து நீங்கள் உள்ள பிரதேசத்தை குறிப்பிட்டால் விண்வெளி சர்வதேச நிலையம் எப்போது உங்களது பிரதேசத்தை கடக்கும் என நேரத்தை குறிப்பிடும்.
சில பரந்த பரப்பான இடங்களில் 6 நிமிடம் வரை காட்சியளிக்கும் இது சில இடங்களில் 1 - 2 நிமிடங்கள் வரை கட்சி அளிக்கும்.
ஏனைய தொழில்நுட்ப செய்திகளுக்கு
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News