பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு பேர் அதிர்ச்சி

ஃபேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள் செயற்படும்  விதத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைவு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


அதாவது சுமார் 50 மில்லியன் பேர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பு அற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டுள்


இந்நிலை குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை துறை துணைத் தலைவர் கய் ரோசன் என்பவர் கூறுகையில். இக்குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25ஆம் திகதி மாலை கண்டறிந்துள்ளனர். 


இதனை சரி செய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் பேஸ்புக்கில் உள்ள view As என்ற வசதியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே இது தற்காலிகமாக செயற்படாது என தெரிவித்துள்ளார்


தங்களது கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை facebook பயனாளிகள் அறிந்து கொள்ளும் வழிமுறை இதோ


தமது செல்போனிலோ அல்லது கணனியிலோ முதன் முறையாக லாக் இன் செய்யும் போது சேவ் பாஸ்வேர்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும் இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போதும் பாஸ்வேர்டு கேட்காது.


ஆனால் ஒருவேளை உங்களது கணக்கு லாக் செய்யப்பட்டிருந்தால் ஒருவர் லாக் இன் செய்யும் போது வழக்கம்போல் பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.


லாக் அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும். அவ்வாறு நமது கணக்கு தானாகவே லாக் அவுட் செய்யப்பட்டாள் நமது கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.


எப்போதும் போல ஸ்போர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் இருந்தால் அந்த ஒன்பது கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.ஏனைய தொழிநுட்ப செய்தி களை அறிந்து கொள்ளநன்றி
  தமிழால் இணைவோம். 
BIG BIT TECH TAMIL
Post a Comment

Previous Post Next Post