குரல்வழி கட்டளைகள் மூலம் உதவிகளைப் பெறக்கூடிய சாதனமே அலெக்சா சாதனம் என்று அழைக்கப்படுகின்றது.
அமேசான் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இச் சாதனமானது குறிப்பிட்ட சில மொழிகளுக்கு மாத்திரமே செயல்படுத்தக் கூடியதாக
இருந்ததோடு மாத்திரமல்லாது இன்று இன்னும் சில மொழிகளைச் செயற்படுத்த கூடியவாறு மாற்றம் செய்யப்பட்டு உலகலாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது தற்போது ஸ்பானிஷ் மொழியிலும் செயல்படுத்தக்கூடிய வசதி இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் இனை இணைத்து பயன்படுத்தக் கூடியதாகவும், இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இனை இணைத்து பயன்படுத்தக் கூடியதாகவும், கனடாவில் கனேடிய ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியினை இணைத்து பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.
Tags:
Tech News