தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளிகள் பதிவு செய்தாள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சீன வீடியோ ஆப் நிறுவனமான டிக் டாக் தனது தளத்தில் இனிவரும் காலங்களில் கட்டன அரசியல் விளம்பரங்கள் இடம் இடம்பெறாது என அறிவித்துள்ளது.
இன்றைய மில்லெனியல் மக்களை கவர்வதே டிக் டாக் செயலியின் முக்கிய நோக்கமாகும். இதனால் கட்டண அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்காது என அறிவித்துள்ளது.
பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தயாரிப்பில் உருவான டிக் டாக் ஆப் இந்தியா மட்டுமல்லாது பல தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் பலமான வரவேற்பை பெற்றுள்ளது.
என்பது இதுகுறித்து டிக்டாக் துணைத்தலைவர் ப்லேக் சாண்லீ கூறுகையில் ஒரு வேட்பாளரை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் விளம்பரம் அரசியல் தலைவர் முன்னாள் தலைவர், கட்சி, ஆட்சி, குழு, மாநில, தேசிய, சர்வதேச என எவ்வித அரசியல் சார்ந்த விளம்பரங்களும் இனி எங்களது தளத்தில் இடம்பெறாது என கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் ஒரு மாதத்தில் மாத்திரம் 500 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் டிக் டாக் செயலியில் உள்ளனர். டீன் ஏஜ் குறிப்பாக மில்லேனியனுக்கு அடுத்த தலைமுறையினரே டிக் டாக் செயலி ஈர்க்க முயற்சித்து வருகிறது. தடைசெய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
Tags:
Tech News