Ookla ஆனது speed test global index அடிப்படையில் 145 நாடுகளில் உள்ள இணைய வேகத்தினை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா 131 ஆவது இடத்தில் உள்ளது. ஆசிய நாடுகளை மாத்திரம் கருத்திற் கொள்ளும் போது இந்தியாவினை விடவும் மேலும் 15 நாடுகள் அதிக வேகம் கொண்ட இணைய வசதியினை கொண்டிருக்கின்றன.
இவற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என்பனவும் உள்ளடக்குகின்றது. ஆசிய நாடுகளின் தென்கொரியா முன்னிலை வகிக்கும் அதேவேளை அந்நாட்டின் தரவிறக்க வேகம் 111.00mbps ஆகவும் வரவேற்ற வேகம் 16.51mbps ஆகவும் காணப்படுகின்றது.
அத்தோடு உலக அளவிலான சராசரி இணைய தரவிறக்க வேகம் 28.02mbps ஆக அதிகரித்துள்ளதுடன் சராசரி தரவேற்ற வேகமானது 10.87mbps ஆகவும் இருக்கின்றது
Tags:
Tech News