சம்சுங் நிறுவனமானது தமது புதிய வரவான மடிக்கக்கூடிய Samsung galaxy fold கைப்பேசியினை சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
முதன் முதலில் தென் கொரியாவில் அறிமுகம் செய்ததோடு பின்னர் அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்து இம்மாத இறுதிக்குள் மேலும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜப்பான், போலந்து, மெக்சிகோ, மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறித்த தகவலின் படி ஜப்பானில் வரும் 25 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் ஏனைய மூன்று நாடுகளிலும் அறிமுகம் செய்யும் திகதி வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எனினும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags:
Tech News