சமூக வலைதளங்களில் மிக பிரபல்யமான ட்விட்டர் தளம் அனிமேஷன் படங்களை பகிர்வதை தடைவிதித்துள்ளது அனைத்து பயனாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டர் இணையத்தளத்தில் அனிமேஷன் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புக்களை பகிறும் வசதி காணப்பட்டது. இதில் அனிமேஷன் புகைப்படங்களை பகிரும் வாசதியினையே தடைசெய்துள்ளது.
இது குறித்து அறிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் அனிமேஷன் புகைப்படங்களை பயன்படுத்தி பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்கு ஹேக்கர்கள் முயட்சித்தமையால் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளது.
Animated Png வகை கோப்புகளை பயன்படுத்தியே குறித்த வகை திருட்டு இடம்பெற்றுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Epilepsy Foundation நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கின் மீது இத்தகைய தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்தே ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது.
இதே போன்று வீடியோ கோப்புகளை பயன்படுத்தி வாட்சப் தரவுகள் திருடப்பட்ட சம்பவமும் அன்மைகலத்தில் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
Big Bit Tech
Tags:
Tech News