Facebook மற்றும் Twitter நிறுவனம் கலந்து சிறப்பிக்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடு லாஸ் வேகாஸ்ஸில் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி தொடங்க இருக்கின்றது .
இந்த நிகழ்ச்சியானது தொழில்நுட்ப சாதனங்களை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி Facebook மற்றும் Twitter நிறுவனத்தின் சகல விடயங்கள் புது வரவுகள் பற்றிய முழுமையான விபரங்கள் மற்றும் விளக்கங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக அமைய இருக்கின்றது.
இந்த CES 2020 நிகழ்ச்சியானது பெரும்பாலும் பலதரப்பட்ட நிறுவனங்களாயின் இளைத்திறனியல் சாதனங்களை காட்சிப்படுத்தவே நாடாத்தப்பட்டு வந்தது. அனால் இம்முறை வித்தியாசமாக இந்த நிகழ்வில் சமூக வலைத்தளங்களும் பங்கு கொள்கின்றமை மிகச்சிறந்த விடயமாக மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தொடர்பாக பலவெரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயகத்திட்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றமை, பயனாளர்களின் தனியுரிமை தகவல்கள் திருடப்படுகின்றமை போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
இது போன்ற பல விடயங்களுக்கு தகுந்த தீர்வினை Facebook மற்றும் Twitter இந்த நிகழ்வின் மூலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
Tags:
Tech News