நம்மில் அதிகமானவர்களது Internet Data அதிகமாக பாவனைக்குற்படுவது Whatsapp மூலமாகும். அதன் பாவனை அதிகம் என்பதால் எப்போதுமே Whatsapp இக்காக நாம் ஒதுக்கும் Data யின் அளவு அதிகமே.
அந்த வகையில் நீங்கள் Data இணை மிச்சப்படுத்துவதட்கான சிறந்த யுக்தியே Mute செய்வதாகும். இதன் மூலம் நீங்கள் தேவைக்கு ஏற்ப அதிகம் பயன்படுத்தாத உங்களுடைய Whatsapp Group களை Mute செய்து வைக்கலாம்.
இந்த Mute வசதியினை நீங்கள் 1 மணித்தியாலம், 1 வாரம் மற்றும் 1 வருடம் வரை நீடித்துக் கொள்ள முடியும்.
Mute செய்யும் வழிமுறைகள்
- நீங்கள் Mute செய்ய விரும்பும் Whatsapp Group இக்கு செல்லவும்.
- திரையில் வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட Option இணை தெரிவு செய்யவும்.
- அதில் "Mute Notification" எனும் தெரிவை தெரிவு செய்யவும்.
- இதில் உங்களுக்கு தேவையான காலப்பகுதிக்கு குறிப்பிட்ட குழுவினை Mute செய்து வைக்க முடியும்.
Whatsapp யில் Data இணை மிச்சப்படுத்த சிறந்த இன்னுமொரு வழியே உங்களது Auto Download யினை நிறுத்தி வைக்கும் செயற்பாடு ஆகும். இதன் மூலம் நீங்கள் வீணான பதிப்புகளை பதிவிறக்கி உங்கள் Data வினை வீணாகுவதை தடுக்க முடியும்.
Auto Download யினை நிறுத்தி வைக்கும் வழிமுறைகள்
- Whatsapp இணை Open செய்தவுடன் திரையில் வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட Option இணை தெரிவு செய்யவும்.
- Setting என்ற Option இணை தெரிவு செய்யவும்.
- Data and Storage Usage என்ற Option இணை தெரிவு செய்யவும்.
- Media Auto Download என்ற தெரிவினை தெரிவு செய்யவும்.
- இதில் Select செய்து உள்ள அனைத்தினையும் De-Select செய்யவும்.
மேற் குறிப்பிட்ட வழிமுறைகளில் உங்களின் Data Whatsapp மூலம் வீணாவதை நீங்கள் இலகுவாக தடுக்க முடியும். இதன் மூலம் குறைந்த அளவான Data மூலம் அதிக நாள் உங்கள் Whatsapp பாவனையை நீடித்துக் கொள்ள முடியும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL
Tags:
Tech News