Windows11 பலரது எதிர்பார்ப்பினை பெற்று இருந்தாலும் எப்போது வெளியாகும்? எப்போது Windows 10 பயனாளர்கள் upgrade செய்ய முடியும் ? என்ற கேள்வி பல பக்கம் எழுந்த வண்ணமே உள்ளது.
இந்த வாரம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது தலையங்கத்தில் இருந்தவண்ணம் online ஊடாக Windows 11-ஐ அறிமுகம் செய்திருந்தது. இதில் பல புதுமையான விடயங்களை உள்ளடக்கப்பட்டிருந்தது. புதிய Start Menu மற்றும் Gamers களுக்கான Game Pass ஊடான Xbox Library அனுமதி மற்றும் Widgets, பல அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் திரையில் பயன்படுத்துவதற்கான வசதி மற்றும் புதுவகை Themes என பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Windows 10 பயன்படுத்துபவர்களுக்கு முற்றிலும் இலவசமாக Windows 11 அப்டேட் செய்து கொள்ள முடியும் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னர் விண்டோஸ் 7 அல்லது 8 பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்யும் வசதியினை வழங்கி இருந்தது அதை இன்னும் நடைமுறையில் உள்ளது.
விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தும் உறுதியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் விண்டோஸ் 11 அறிமுகப்படுத்தப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. மற்றும் புதிதாக தயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கின்ற லேப்டாப் மற்றும் தனிநபர் கணினிகளில் விண்டோஸ் 11 பாதிப்பு இருக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுகுறித்து தெரிவிக்கும்போது upgrade செய்வதற்கான செயற்பாடுகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் விண்டோஸ் 11 அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும் Windows 10 பாவனையாளர்கள் அனைவரும் Windows 11 இனை பயன்படுத்த முடியாது என்றும் இவர்கள் விண்டோஸ் 10 உடன் சேர்த்து அவர்களது கணணி Windows 11 பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச தகுதி இருப்பின் மாத்திரமே windows 11 இணை upgrade செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்.
BIG BIT TECH - TAMIL