ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வருடார்ந்த WWDC 2021 மாநாட்டில் பல முக்கியமான தனியுரிமை அம்சங்களை அறிவித்துள்ளது.
இதில் "Private Relay" எனும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய ஐபி முகவரியை வெளிப்படுத்தாமல் இணைய தளத்தில் நுழைய முடியும்.
மேலும் ஆப்பிள் பயனாளர்கள் பயன்படுத்திய icloud வசதி icloud plus ஆக update செய்யப்பட்டுள்ளது. பயனாளர்கள் icloud plus ற்கு மாறும் போது எந்தவித மேலதிக பணமும் அறவிடப்போவதில்லை என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்பிளின் Private Relay வில் VPNன் செயல்பாட்டை செய்தாலும் முழுமையாகவே VPNனின் பயன்பாட்டினை ஈடு செய்யாது. ஏனென்றால் ஆப்பிளில் உள்ள சபாரி உலாவியில் மாத்திரமே இந்த பிரைவேட் ரிலே பயன்பாடு காணப்படும் VPN போன்று அனைத்து உலாவியிம் பயன்படுத்த முடியாது.
Private Relay எப்படி வேலை செய்கின்றது ?
Private Relay பயன்பாடானது மிக எளிமையானது VPN பயன்பாட்டின் போது ஏற்படும் இடையூறுகள் இதில் காணப்படாது. ஐபோன் ஐபேட் மற்றும் MAC ல் உள்ள icloud + ல் இணைந்து அதில் உள்ள செட்டிங்கில் ON செய்ய வேண்டும்.
இதன் மூலம் உங்கள் சபாரி செயல்பாடுகள் பாதுகாக்கப்படும். தோராயமாக இரண்டு Serverகளை தெரிவு செய்து உங்களுக்காக அதனை கையாளுகின்றது.
இதன் மூலம் உங்கள் கணக்கு உறுதிப்படுத்தப்பட்டு உங்களுடைய பயனாளர் பெயர், கடவுச்சொல் பிறருக்கு அனுப்பப்படாமல் Encrypt செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL