கடந்த சில வாரங்களாக Cryptocurrency யில் ஏற்பட்ட பல தாக்கங்கள் அதன் வளர்ச்சியில் பாரிய பின்னேற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு காரணங்களாக China யில் ஏற்பட்ட Cryptocurrency வீழ்ச்சி, Elon Musk யின் Twitter அறிக்கை போன்றவற்றை குறிப்பிட முடியும்.
அதனை தொடர்ந்து இந்த வாரம் Bitcoin இன் வளர்ச்சி ஒரு சீரான நிலையை எட்டியுள்ளது. மேலும் Ethereum, Cardano மற்றும் Doge Coin களின் வளர்ச்சி குறைந்த வீதத்தில் அதிரித்திருகின்றது.
Bitcoin சம்பந்தப்பட்ட சட்ட மூலம் மத்திய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மாதத்தில் இருந்து Bitcoin யில் ஒரு விளைவினை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
இதே சட்டத்தை பிற நாடுகளும் இயற்றகூடிய சந்தர்ப்பம் அதிகம் இருப்பதால் Crypto Currency ஒரு பாரிய முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
பாரிய முதலீட்டாளர்கள் Cryptocurrency யில் குறுகிய மற்றும் நடுத்தர கால முதலீடு திட்டத்தினை அதிகம் தெரிவி செய்வதாக Crypto ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். Micro Strategy போன்ற முக்கிய முதலீட்டளர்கள் தொடர்ந்து Cryptocurrency களை வாங்கிய வண்ணமே உள்ளனர்.
Doge Coin யின் இணை நிறுவனர் பில்லி மார்கஸ் 8 வருடங்களில் முதல் முறையாக meme-inspired cryptocurrency களை வாங்கியதாக கூறியுள்ளார்.
நன்றி
தமிழால் இணைவோம்