கணனி வன்பாகம் மற்றும் மென்பொருட்களின் ஒன்றிணைந்த ஒரு கூட்டே ஆகும். இதில் வன்பாகங்கள் மிக முக்கியமானவை. அவையே கணனியை பௌதீக ரீதியில் உணர்வதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
அவைபற்றிய பூரண விளக்கங்களை ஒவொரு பதிவின் ஊடக நாம் இங்கே பார்க்கலாம்.அவ்வாறான வன்பாகங்களின் ஒன்றான வன்தட்டு (Hard Disk, Hard Disk, Fixed Disk) பற்றிய பூரண விளக்கத்தை பற்றி இந்த பதிவின் ஊடக அறிந்து கொள்வோம்.
வன்தட்டின் பிரதான தொழிலே தரவுகளை சேமித்து வைக்க பயன்படும் ஒரு சாதனம். வன்தட்டினை பொதுவாக Non-volatile Storage (ஆவியாகாத நினைவகம்) என அழைகின்றோம். அதற்கு காரணம் இந்த வன்தட்டில் சேகரிக்கும் தரவுகள் நிலையானதாக நாம் எப்போது தேவை ஏற்படும் போதும் மீள பெற்று பயன்படுத்தும் தன்மையை கொண்டது.
வன்தட்டில் தரவுகளை சேமிப்பதற்காக வேண்டி Electro Magnetic முறையில் சேமிக்கப்படுகின்றது. இதற்காக வேண்டி Magnetic Head மற்றும் Platters பயன்படுத்தப்பட்டுள்ளது.
![]() |
RAMAC 305 |
Hard Disk யின் கட்டமைப்பினை பொதுவாக இரண்டு கூறுகளாக வகைப்படுத்தி பார்க்க முடியும், ஒன்று Physical Structure மற்றும் Logical Structure. Physical Structure யில் பொதுவாக Hard Disk யில் உள்ள பாகங்களை குறிப்பிடலாம். Logical Structure அந்த பாகங்களை இயங்க வைப்பதற்கான அறிவுறுத்தல்களை கொண்ட ஒரு பாகம் ஆகும்.
Physical Structure
Platter :இது Hard Disk யில் காணப்படும் CD போன்ற ஒரு வகை தட்டு ஆகும். இது Hard Disk இனுள் இரண்டிற்கு மேற்பட்ட அளவுகளில் காணப்படும். இதன் மேற்பரப்பு காந்த பூசுக்களுடன் காணப்படும். இதில் தான் தரவுகள் இலத்திரனியல் வடிவில் சேமிக்கப்படும்.
Track :
இது Platter யில் காணப்படும் ஒரு வட்ட வடிவ பகுதி ஆகும். இதி சில பிரிவகளாக காணப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்துவமான எண்கள் வழங்கப்பட்டு இருக்கும். Platter யில் தரவுகள் சேமிக்கப்படும் இடமாக இது காணப்படும். இதில் உள்ள தரவுகளையே Head வாசிக்கும்.
Cylinder :
இது ஒவ்வொரு Platter யில் உள்ள Track யின் விளிம்புக்களின் ஒரு தொகுப்பே Cylinder என அழைக்கப்படுகின்றது.
Sector :
Tracker யில் உள்ள வட்ட வடிவ பகுதி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் அது Sector என அழைக்கப்படும். இதில் ஒவ்வொரு பகுதியும் 512B கொள்ளளவினை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு Sector இக்கும் தனித்துவமான எண்கள் காணப்படும்.
Head :
Platter யில் உள்ள Track யில் தரவுகளை சேமிக்கவும் பின்னர் அந்த தரவுகளை வாசிக்கவும் பயன்படும் ஒரு பகுதி ஆகும். இது Read & Write செயற்பாடுகளை செய்கின்றது.
Arm & Arm Assembly :
இது Head இணைதாங்கிப் பிடிக்க உதவுகின்றது. அந்த Arm இணை பிடிப்பது Arm Assembly ஆகும்.
Spindle :
Platter அனைத்தும் Spindle யில் இணைக்கப்பட்டு இருக்கும். இது Platter இணை சுற்றுவதற்கு உதவுகின்றது.
Logical Structure
Power Connector :
இது Hard Disk யில் மின் இணைப்பினை ஏற்படுத்த உதவுகின்றது.
IDE Connector :
இது தரவுகளை Hard Disk இற்கு பரிமாருவதட்கு உதவுகின்றது.
Hard Disk யின் வெளிப்புற தோற்றம்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL