உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் வேகமான மென்பொருள் அப்டேட்களை வழங்கும் நோக்கில் Oneplus மற்றும் Oppo நிறுவனங்கள் கைகொர்த்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.
சீனாவினை மையமாக கொண்டு இயங்கும் இந்த இரு கம்பனிகளும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடிக்கயாளர்களின் தேவை அறிந்து வெளிட்டு வந்தது. இதனால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெற்று இருந்ததது.
BBK Electrical என்ற நிருவனதிட்கு சொந்தமா இந்த இரண்டு Brand களும் இருந்து வந்தது. அனால் இப்போது இந்த இரண்டு Brand களும் ஒன்றாக செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
Oneplus நிறுவனத்தின் நிறுவனர் பீட் லாவ் இது பற்றி குறிப்பிடும் போது முழுமையாக உருவாக்குதல் என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் இருந்து Oneplus மற்றும் oppo நிறுவனங்கள் தனித்தனியாகவே இயங்கும் என தெரிகின்றது. அனால் வளப்பகிர்வு மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடுகள் இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலும் காணப்படும்.
மேலும் பீட் லாவ் குறிப்பிடும் பொது இந்த இணைப்பானது பயனாளர்களுக்கு சிறந்த தயாரிப்புக்களை வழங்குவதற்கு ஏற்ற வளங்கள் இந்த ஒருங்கிணைப்பின் மூலம் எங்களுக்கு அதிகமாக கிடைக்கும் என குறிப்பிட்டார்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH- TAMIL