Xiaomi நிறுவனமானது தனது உப பிரிவான Redmi யில் இருந்து ஒரு அட்டகாசமான Note Series Smart Phone இன்றினை அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் அதிகமானவர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய Redmi Note 10 Pro பற்றிய அதனது நிறை குறைகளை இந்த பதிப்பில் இருந்து பார்க்கலாம்.
இந்த வருடம் மார்ச் மாதம் 4ம் திகதி உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தி இருந்த இந்த ஸ்மார்ட் போன் அணைத்து வித நடுத்தர பவனையளர்களினதும் எதிர்பார்ப்பினை பெற்று இருந்தது.
Body :
மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் வடிவம் அனைவரையும் கவர்ந்த ஒரு Design ஆஹா இருந்தது. வெறும் 8.1mm மாத்திரமே இதன் தடிமனாக இருந்தது, அது மட்டும் இல்லாமல் இதனது நிறை 193g ஆக உள்ளது ஒரு கை பாவனைக்கு போதுமானதாக உள்ளது. இதன் முன்னும் பின்னும் Gorilla Glass 5 பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Display :
Amoled தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இதன் Display, 120Hz தொடுதிரனையும் கொண்டுள்ளது. இது தொடுதிரனின் அனுபவத்தினை உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. மேலும் இந்த Display யின் அளவு 6.67 இன்ச் அளவினையும் 1200 nits வரை செல்லகூடிய Brightness சக்தியினையும் கொண்டுள்ளது.
Internal :
இதன் வெளிப்புற வடிவமைப்பிற்கு ஏற்றல் போல் உட்புற வடிவமைப்பும் குறையின்றியே உள்ளது என்று கூறலாம். Qualcomm நிறுவனத்தின் Snapdragon 732G என்ற புதிய சக்தி வாய்ந்த Chipset பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றல் போல் செயல் திறனை வழங்க 6 & 8 gb RAM மற்றும் UFS 2.2 உடனான 64GB, 128GB செமிப்பகமும் வழங்கப்பட்டுள்ளது.
Camera :
இந்த ஸ்மார்ட் போன்யின் மிக பிரதானமான சந்தைப்படுத்தல் Camera வினை மையப்படுத்தியதாகவே அமைந்து இருந்ததினை பார்க்ககூடியதாக இருந்தது. 108MP பிரதான Camera வினை கொண்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மேலும் 8MP Ultrawide, 5MP Macro, 2MP Depth உள்ளடக்கலாக பின் பக்கம் மொத்தம் 4 Cameraக்கள் உள்ளது.
இதன் முன்பக்கமாக 16MP கொண்ட Camera உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின் பக்க Camera மூலம் 4k Video வரை எடுக்க முடியும். முன் பக்க Camera மூலம் 1080p வரை Video எடுக்க முடியும்.
Sound :
Stereo Speaker வசதியினை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் தற்போது காணக்கிடைக்காத Audio 3.5mm Jack வசதியிஞ்சயும் கொண்டுள்ளது.
Battery :
5020mAh கொள்ளளவினை கொண்ட ஒரு பாரிய Battery இந்த ஸ்மார்ட் போன்னில் வழங்கப்படுள்ளது. இதற்கு Charge செய்வதற்காக பெட்டியினுள் Fast Charger உம் உள்ளடக்கப்பட்டுள்ளது. Redmi Note 10 pro வினால் 33W வரை வேகமாக Charge செய்து கொள்ள கூடிய வசதி காணப்படுகின்றது. இந்த வசதியினால் அரை மணி நேரத்தில் 59% வரை Charge செய்ய முடியும் என கூறப்படுகின்றது.
Others :
வலது பக்கத்தில் அமைந்துள்ள Fingerprint Scanner, 5.1 ப்ளுடூத் வசதி, NFC வசதி, FM Radio வசதி போன்ற பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Smart Phone மூன்று வகையான Onyx Gray, Glacier Blue, Gradient Bronze போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. மேலும் Android 11 இயங்கு தளத்தினை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் போன் இயங்குகின்றது.
Price :
இலங்கையில் இதன் விலை
6GB/64GB - 51,999.00
6GB/128GB - 54,999.00
8GB/128GB - Not Available in Sri Lankan Market
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL