பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் Twitter Blue சேவை வெற்றிகரமாக கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
இது மாதாந்த சந்தா சேவையினை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக கனடா நாட்டில் $3.49ம் ஆஸ்திரேலிய நாட்டில் $4.49 வசூலிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் $2.99 அறவிடப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.
அந்த அடிப்படையில் பல்வேறு வகை சந்தா கட்டணங்கள் அறவிடப்படலாம். இதன் மூலம் வேறுபட்ட சேவைகள் அந்த சேவையில் உள்ளடக்கப்படும். உதாரணமாக பயனாளர் ஒருவரால் இடப்பட்ட பதிவினை அவரால் மீளப் பெறக்கூடிய வசதி இந்த Blue பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வசதி மூலம் Twiiter App யில் தங்களுக்கு ஏற்றல் போல் வடிவம் மற்றும் நிறத்தினை மாற்றக்கூடிய தீம்கள் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL