SOCIAL MEDIA களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சட்டமூலம் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலங்களை ஏற்றுகொள்ள TWITTER இக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து TWITTER அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இதனை ஏற்க மறுத்த TWITTER நிறுவனதிற்கு இந்திய அரசின் சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்ட முதல் அமெரிக்க நிறுவனமாக இது மாறியுள்ளது.
இதன் மூலம் தனி நபர் ஒருவர் இடும் பதிவுக்கு TWITTER நிறுவனமே முழுமையாக பொறுப்பு ஏற்க வேண்டும். இதனால இந்தியாவில் இயங்கும் தலைமையகத்தில் பணிபுரியும் இந்திய நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உயர் நிர்வாகிகள் போலீஸ் விசாரணை, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த சட்டமூலம் கூறுவது தேச பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு கருத்துகளையும் முதலில் பகிரும் நபரினை கண்டறிய உதவ வேண்டும் என்பதே ஆகும். இதற்கு முதலில் ஆதரவு வழங்க FACEBOOK, WHATSAPP, YOUTUBE தயங்கி வந்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டது.
அனால் TWITTER மட்டும் தனிநபர் கருத்து சுதந்திரம் என்பதனை காரணம் காட்டி மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே TWITTER நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் அறிவிக்கும் பொது மத்திய அரசின் செயல்பாடுகளைஇணங்க அதிக முயற்சி எடுத்து வருவதாக குறிபிட்டார். விரைவில் இந்த மோதல் சுமுகமாகும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL