Microsoft நிருவனமானது 2025 உடன் தன்னுடைய Windows 10 இற்கான சகல update மற்றும் Security Patches களை வழங்குவதை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த மாத இறுத்திக்குள் Windows இயக்க முறையில் பாரிய மறுசீரமைப்பினை கொண்டுவரைள்ளதாக அறிவித்துள்ளது.
Windows 10 அறிமுகப்படுத்திய போது இதுவே Windows இயங்கு தளத்தின் இறுதி பதிப்பாக இருக்கும் என்று கூறியது. ஆனால் 14 ம் திகதி அக்டோபர் 2025 முதல் Home மற்றும் Pro பதிப்புகளுக்கான அணைத்து update களையும் நிருத்தபோவதாக கூறியுள்ளது.
Windows 7 இற்கான காலம் 2020 உடன் முடிவடைந்த போதிலும் வணிகங்கள் தங்களுடைய Pro மற்றும் Enterprises பதிப்புகளுக்கான update களை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வசதியினை Microsoft நிறுவனம் ஏற்படுத்தி இருந்தது.
Windows 10 10ஆம் திகதி ஜூலை 2015 யில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஒவ்வொரு வருடமும் புதிய பதிப்பினை வெளியிடாமல் ஒரே பதிப்பில்update களை வழங்குவதன் மூலம்குறைந்த கட்டணத்தில் சேவையினை வழங்க கூடியதாக இருக்கும் என்ற நோக்கில் ஒரு சேவையாக பெயரிடப்பட்டது.
அந்த நேரத்தில் Microsoft யின் தலை நிர்வாகி Satya Nadella குறிப்பிடுகையில் தனிநபர் கணனிக்கான ஒரு சகாப்தத்தை உருவாகுவதாக குறிப்பிட்டார். மேலும் Microsoft நிறுவனத்தின் Developer ஜெர்ரி நிக்சன் Windows யின் கடைசி பதிப்பு Windows 10 எனக்குறிப்பிட்டார்.
24th June மாதம் Windows இடக்கான புதிய பதிப்பு வெளியிடப்படவுள்ளது. Microsoft கம்பனிக்கு பல போட்டி சூழல் காணப்படும் நிலையில் அதனை எதிர் கொள்ள இந்த புது இங்குதளம் உருவாக்கப்டுகின்றதாக கூறப்படுகின்றது. இந்த புது OS யிற்கு Windows 11 என்ற பெயரினை இடாமல் புது பெயர் இடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL