மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது தனது விண்டோஸ் 11ம் பதிப்பினை எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் தேதி வெளியிடத் தீர்மானித்திருந்த நிலையில் அதன் பாதிப்பு இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த பதிப்பு உண்மையாக இருப்பினும் ஆனால் அது இறுதியான வெளியீடு இல்லை என இணையத்தளத்தின் The verge இணையத்தளத்தின் எடிட்டர் Tom Warren தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த விண்டோஸ் 11 கசிவு ஒரு First look மாத்திரம் என்றும் இதில் புதிய Start menu, Round Corners மற்றும் Startup sound போன்றவை புதுமைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்த கருத்தினையும் தெரியவில்லை. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Twitter பக்கத்தில் "இது ஒரு தொடக்கம்தான் ஜூன் 24ஆம் திகதி 11 a.m. மணிக்கட்டில் என்ன என்பதை ET னை ON செய்து பார்க்கவும்" என குறிப்பிட்டுள்ளது.
விண்டோஸ் 11 என்ற பெயரினை பிரதிபலிக்கும் வகையில் 24 ஆம் திகதி அன்று 11 நிமிடம் வீடியோ காட்சி ஒன்றும் 11 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL