சீல் செய்யப்பட்ட Super Mario 64 Video Game ஏலத்தில் $1.5 மில்லியனுக்கு விற்கப்பட்டு சாதனைகளை முறியடித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு Cartridge நிறுவனம் Nintendo 64 Console இணை அறிமுகப்படுத்தி இருந்தது. அது அந்த காலப்பகுதியில் மிகப் பிரபல்யமான 3D இயங்குதளங்களில் ஒன்றாக இருந்தது.
இது போன்ற இன்னும் 5 பிரதிகள் நல்ல நிலையில் இருப்பதாக ஏலத்தை நடாத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை Original Nintendo Entertainment System (NES) $870,000 இக்கு விட்பனயாகி இருந்தது. அந்த சாதனையை இந்த Super Mario 64 Video Game உடைத்துள்ளது.
இவை போதுமான விளையாட்டு அனுபவத்தினை கொடுக்காவிட்டாலும் பாரிய பெறுமதியைக் கொண்ட பௌதீகரீதியான ஒரு நியாபகச்சின்னமாக இருக்கும்.
இந்த Super Mario 64 Video Game தரப்படுத்தல் நிறுவனமான Watta நிறுவனத்தால் 9.8 என்ற A++ தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இது சரியான தரத்தில் உள்ளதாகவும் அதன் முத்திரை அப்படியே ஒரு புதுசு போல உள்ளதாகவும் அர்த்தம்.
அனால் இந்த தரப்படுத்தல் ஏலத்தில் விலையினை தீர்மானிக்காது. ஏன் என்றால் இதே Super Mario Video Game யின் ஒரு பிரதி வெறும் $13,200 இக்கே விற்பனை செய்யப்பட்டது. மிக அரிதான பிரதிகளே ஏலத்தில் அதிக விலையை தீர்மானிக்கின்றன.
Super Mario 64 Video Game ஆனது அந்த காலத்தில் Nintendo 64 Console யில் மிகப்பிரபல்யமான விளையாட்டாக இருந்துவந்தது. மேலும் Video Game வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகவும் இருந்தது.
இது குறித்து நவீன விளயாட்டு நிபுணர்கள் குறிப்பிடும் போது Super Mario 64 இக்கு இன்னம் வயதாகவில்லை எனவும் சிறய அளவில் Video குறைபாடுகள் இருந்தாலும் இன்றளவில் ஒரு சிறந்த விளையாட்டாகவே உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL