$2.9 மில்லியனுக்கு விற்கப்பட்ட Twitter நிறுவனரின் முதல் Tweet.

 

jack dorsey's first ever tweet sells for $2.9m, twitter, twitter analytics


Twitter நிறுவனத்தின் Founder Jack Dorsey Twitter இல் பதிவிட்ட தனது முதல் Tweet இணை மலேசியாவை சேர்ந்த Sina Estavi என்ற தொழில் அதிபர்  சுமார் $2.9 மில்லியனிற்கு விலைகொடுத்து வாங்கியுள்ளார்.


Jack Dorsey தனது முதல் Tweet யில் "just setting up my twttr" என்று பதிவிட்டு இருந்தார். இந்த Tweet ஆனது 2006ஆம் ஆண்டு மார்ச் 21 வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்குவதற்காக ஏலமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Jack Dorsey ஏழை குடும்பங்களுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை வழங்குவதற்காக திட்டமிட்டு இருந்தார். அந்த நன்கொடையில் ஒரு பங்காக இந்த பணத்தினையும் சேர்த்துள்ளார். சுமார் 15 வருடங்களின் பின் இந்த விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவை.


இந்த விற்பனையானது Cryptocurrency களில் ஒன்றான Ethereum இணை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது Bridge Oracle தலைமை நிறுவாகியான Sina Estavi இற்கு Non Fungible Token (NFT) என்ற Digitel வடிவில் விற்கப்பட்டது.

NFT என்பது ஒரு புகைப்படம் மற்று வீடியோ வடிவிலான Online ஊடகங்களின் பிரதி ஆகும். இதனை யார் வைத்துள்ளார்கள் என்பதை தெரிவிக்கும் ஒரு சான்றிதழ் ஆகும். இந்த NFT சான்றிதலானது தனித்துவமான பிரதி எடுக்க முடியாத உருப்படியாக செயல்படும்.


இதனை வாங்கிய Sina Estavi தனது Twitter பக்கத்தில்இது குறித்து பதிவு ஒன்றினை இட்டு இருந்தார். " இது ஒரு Tweet மாத்திரமல்ல, மோனலிசா ஓவியம் போன்று இந்த Tweetயின் உண்மையான மதிப்பினை மக்கள் பல ஆண்டுகளுக்கு பின் உணர்வார்கள் என நினைக்கின்றேன்" என பதிவிட்டு இருந்தார்.


நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH - TAMIL       


 

Post a Comment

Previous Post Next Post