E.V.G.A. நிறுவனம் கணனிகளுக்கான உதிரிப்பாகங்களை தயாரித்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். பல வெற்றிகரமான பிரபலான ஒரு BRAND ஆகவும் திகழ்ந்து வருகின்றது.
NVIDA யின் அங்கீகரிக்கப்பட்ட உயர் பங்காளிகளில் E.V.G.A. நிறுவனமும் ஒன்று. பல்வேறுபட்ட திட்டங்கள் மற்றும் சிஸ்டம் தயாரிப்புகளில் முன்னிலை மற்றும் 90 நாள் படிநிலை முன்னேற்றம் என்பவை மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெற்ற நிறுவனமாகும்.
E.V.G.A நிறுவனம் தனது YOUTUBE பக்கத்தின் மூலம் ஒரு 9 வினாடி VEDIO பதிவினை விட்டு இருந்தது. அதில் AMD நிறுவனத்தின் RYZEN PROCESSOR இக்கான MOTHERBOARD இணை தயாரிக்கும் என்ற வதந்தியை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
VIDEO :
ஆரம்ப காலத்தில் RYZEN PROCESSOR இக்கான MOTHERBOARD களை உருவாக்குதை தவிர்த்து வந்தது E.V.G.A. நிறுவனம். ஆனால் E.V.G.A. நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் புகை போன்ற ஒரு இடத்தில DARK என்ற வசனத்தை சுற்றி RYZEN யின் LOGO வரும் வடிவில் அமைந்து இருந்தது.
X570 என்ற MOTHERBOARD இணை E.V.G.A நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் அது RYZEN இக்கானது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே INTEL நிருவனதிற்காக 10 LAYERS PCD, 22-phase VRM கொண்டு உருவாக்கப்பட்ட "Z590 DARK" என்ற MOTHERBOARD சந்தையில் வெற்றியடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL