கூகுள் நிறுவனம் தங்களுடைய Play Store ல் வெளியிடப்படுகின்ற app களுக்கான புதிய நடைமுறை ஒன்றினை developers களுக்கு அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தின் பின் கண்டிப்பாக இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும் என்று developers களுக்கு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Android app bundel என்பது தங்களுடைய appயினை வினைத்திறனான முறையில் உருவாக்கவும் அவற்றை வெளியிடவும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒரு முறைமையாகும். இது windows 11 இணை microsoft நிறுவனம் அறிவித்த போது அதில் android appகளை பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை தொடர்ந்தே கூகுள் நிறுவனம் இந்த முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
Windows11 ல் இயங்கும் வகையில் வடிவமைக்கும் பொருட்டே இந்த நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. Android app களை Amazon app store ல் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் கூகுள் நிறுவனம் android app bundle புதிதாக அறிமுகப்படுத்தப்படும் app களுக்கு மாத்திரமே ஆகும் பழைய app கள் இதனை பின்பற்ற தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH -TAMIL