கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட Gmail யின் பாதுகாப்பு அம்சமான அங்கீகரிக்கப்பட்ட Brand Logo க்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என கூகிள் நிறுவனம் இந்த திங்கக்கிழமை அறிவித்திருந்தது.
இந்த செயற்பாடு Brand Indicators for Message Identification (BIMI) யினால் இயக்கப்பட்டது. அதனுடன் Google நிறுவனமும் 2019 யில் இணைந்து கொண்டது.
இதன் யோசனை உங்களுக்கு இதற்கு DMARC தரத்தினை பயன்படுத்தி ஒரு ஈமெயில் அனுப்பும் போது அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து வரும் என்றால் அவர்களின் Logo உடன் உங்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கப்பெறும்.
இதன் மூலம் உங்களுக்கு பாதுகாப்பான மின்னஞ்சல் வந்துள்ளதை அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் போலியான விடயங்களை தவிர்த்து நமது தரவுகளை பாதுகாக்க இது உதவுகின்றது.
இதன் செயல்பாடு.
Sender Policy Framework (SPF) அல்லது Domain Keys Identified Mail (DKIM) மற்றும் deploy DMARC அமைப்புகள் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட Logo க்களை Google நிறுவனதிற்கு Verified Mark Certificate (VMC) ஊடாக உறுதிப்படுத்தி அனுப்பும். இதனை கொண்டு Logo உரிமை சரிபார்ப்பு, சான்றிதல் சரிபார்ப்பு என்பவற்றை கொண்டு VMC உடன் சமர்ப்பிக்கும். இதனை கொண்டு Google நிறுவனம் தனது Gmail Avatar யில் அந்த நிறுவனங்களுடைய Logoக்களை பதிவிடும்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL